Published:Updated:

மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள்... போலீஸ் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை - சேலத்தில் அதிர்ச்சி

கொலை

மாமியாரை அடித்துக் கொன்றுவிட்டு, போலீஸுக்கு பயந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட மருமகள் - சேலத்தில் நடந்தது என்ன?

மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள்... போலீஸ் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை - சேலத்தில் அதிர்ச்சி

மாமியாரை அடித்துக் கொன்றுவிட்டு, போலீஸுக்கு பயந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட மருமகள் - சேலத்தில் நடந்தது என்ன?

Published:Updated:
கொலை

சேலம் இடைப்பாடி, தானமுத்தியூரைச் சேர்ந்த இருளப்பன் மனைவி தைலம்மாள். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு இருளப்பன் இறந்தநிலையில், தைலம்மாள் தன் இரண்டாவது மகன் மெய்வேல் வீட்டில் வசித்துவந்தார். இந்த நிலையில் தைலம்மாள் தங்களுடனேயே வீட்டில் தங்கியிருப்பது, மெய்வேலின் மனைவி செல்விக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

தைலம்மாள்
தைலம்மாள்

மருமகள் செல்வி தன்னைக் கொடுமைப்படுத்துவது தெரிந்தும் வேறு வழியில்லாமல் தைலம்மாள் அவர்களுடன் வசித்துவந்திருக்கிறாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில், ஆத்திரமடைந்த செல்வி, தன் அருகிலிருந்த கட்டையை எடுத்து, மாமியாரைச் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்.

அதில், பலத்த காயமடைந்த தைலம்மாள் ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார். இதைக் கண்ட மெய்வேலின் அண்ணன் மகன் ஈஸ்வரன், தைலம்மாளை மீட்டு இடைப்பாடி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே தைலம்மாள் பரிதாபமாக இறந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
செல்வி
செல்வி

இந்தச் சம்பவத்தைக் கேட்டறிந்த செல்வி, போலீஸார் தன்னைக் கைதுசெய்துவிடுவார்கள். தனக்கும், தன் குடும்பத்துக்கும் பெரும் அவமானம் ஏற்பட்டுவிடும் என்று தனது வீட்டுக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொங்கணாபுரம் போலீஸாருக்குத் தகவல் அளிக்க, சங்ககிரி டி.எஸ்.பி ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் வெங்கட்பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். சேலத்தில் மாமியாரைக் கொன்று மருமகளும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.