Published:Updated:

சாத்தான்குளம்: அடகு நகைப் பிரச்னை... பெற்ற மகளால் தந்தைக்கு நேர்ந்த துயரம்!

சாத்தான்குளம் காவல் நிலையம்

தூத்துக்குடியில் அடகுவைத்திருந்த நகையை மீட்டுத் தராத தந்தையை பெற்ற மகளே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம்: அடகு நகைப் பிரச்னை... பெற்ற மகளால் தந்தைக்கு நேர்ந்த துயரம்!

தூத்துக்குடியில் அடகுவைத்திருந்த நகையை மீட்டுத் தராத தந்தையை பெற்ற மகளே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
சாத்தான்குளம் காவல் நிலையம்

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள ஞானியார் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகபாண்டி. இவரின் மனைவி வாசுகி. இவர்களுக்கு அமுதா என்பவர் உட்பட ஆறு மகள்கள், 4 மகன்கள் என 10 குழந்தைகள். இவர்களில், இரண்டு மகன்கள் இறந்துவிட்டனர். அமுதாவுக்கும், அவரின் தங்கைக்கும் திருமணம் ஆகவில்லை. மற்றவர்கள் திருமணமாகி தனியே வசித்துவருகிறார்கள். ஆறுமுகபாண்டி, தன் மகள் அமுதாவின் ஐந்து பவுன் நகையை கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்துள்ளார். அடகுவைத்து அந்தப் பணத்தில் சாத்தான்குளம் அருகேயுள்ள சுப்பராயபுரம் கிராமத்தில் தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவந்திருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட அமுதா
கைதுசெய்யப்பட்ட அமுதா

ஆறுமுகபாண்டியும் மகளும் தோட்டத்திலேயே தங்கியிருந்து தோட்ட வேலை பார்த்துவந்துள்ளனர். இந்த நிலையில், அடகுவைத்த நகையை திருப்பித் தர வேண்டும் என கடந்த ஐந்து மாதங்களாகத் தந்தையிடம் கேட்டுவந்தாராம். நகையை மீட்டுத்தர எந்த முயற்சியும் எடுக்காமல் ஆறுமுகபாண்டி காலம் தாழ்த்திவந்திருக்கிறார். இது தொடர்பாக தந்தை, மகளுக்கிடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுவந்திருக்கிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பும் நகையை மீட்பது தொடர்பாகத் தகராறு ஏற்பட, தந்தையின் பைக் சாவியை எடுத்து வைத்துகொண்டு நகையைக் கொடுத்துவிட்டு சாவியை வாங்கிக்கொள்ளுமாறு கூறியிருக்கிறாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு முற்றியதால், கோபத்தில் ஆறுமுகபாண்டியின் தலையில் அரிவாளால் வெட்டியிருக்கிறார். இதில் தலையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகப்படியாக வெளியேறியுள்ளது. இதையடுத்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காலை உயிரிழந்தார். இதையடுத்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார் அமுதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். ``ஓலைக்கொட்டகையில் செருகிவைத்திருந்த அரிவாள் கட்டிலில் படுத்திருந்த தந்தையின் தலையில் விழுந்து வெட்டுக்காயம் ஏற்பட்டுடுச்சு” எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், ஆறுமுகபாண்டியின் தலையில் பட்டுள்ள வெட்டுக்காயம், அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.

கொலை நடந்த தோட்டம்
கொலை நடந்த தோட்டம்

இந்த நிலையில், அமுதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ”அடகுவெச்ச அஞ்சு சவரன் நகையை மீட்டுத்தரச் சொல்லிச் சொன்னேன். நாலஞ்சு மாசமா சொல்லியும் அவர் கேட்கலை. அவர் கையில பணம்வெச்சிருந்தும் நகையை மீட்டுத் தரலை. இது சம்பந்தமா எனக்கும் அப்பாவுக்கும் வாக்குவாதம் வந்துச்சு. என் கையிலயிருந்து பைக் சாவியைப் பிடுங்கினார். கோவத்துல அப்பாவோட தலையில அரிவாளால் வெட்டினேன்” எனச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து போலீஸார் அமுதாவைக் கைதுசெய்தனர். அடகு நகைப் பிரச்னையில் பெற்ற தந்தையையே மகள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.