Published:Updated:

காதல் விவகாரம்; வாட்ஸ்அப்பில் வந்த மகளின் திருமண புகைப்படம்! - விபரீத முடிவெடுத்த பெற்றோர்

தற்கொலை (Representational Image)
தற்கொலை (Representational Image)

திருமணமான தகவல் தெரிந்தால் தனது பெற்றோர் மனது மாற வாய்ப்பிருக்கிறது என எண்ணி, திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பெற்றோருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகேயுள்ள பொலையம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னுசாமி - சுமதி தம்பதியர். பொன்னுசாமி சொந்தமாக போர் வண்டிவைத்து தொழில் செய்துவருகிறார். இவர்களுக்கு 22 வயதில் ஜனனி என்ற ஒரு மகள் இருக்கிறார். ஜனனி கோவையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிசியோதெரபி இறுதியாண்டு படித்துவருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, குன்னத்தூரில் கோழிக்கடை வைத்திருக்கும் சம்பத் என்பவர், ஜனனியின் வீட்டுக்குப் பெண் கேட்டுச் சென்றிருக்கிறார்.

கோவில்பட்டி: விபரீத முடிவெடுத்த மனைவி; கைது செய்யப்பட்ட கணவன்; வயது வித்தியாசம்தான் காரணமா?!

ஆனால், ஜனனியின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். மேற்கொண்டு விசாரிக்கையில், ஜனனியை அவர் காதலித்துவருவதாகவும் சொல்லியிருக்கிறார். இது குறித்து பெற்றோர் ஜனனியிடம் விசாரிக்க, `நானும் சம்பத்தை விரும்புகிறேன். எனக்கு அவரைக் கல்யாணம் பண்ணிவெய்யுங்க!’ எனக் கூறியதாகத் தெரிகிறது. `40 வயசு ஆகுது அவனுக்கு. படிச்சு வேலைக்குப் போற வயசுல ஏன் இப்படி தேவையில்லாத வேலை செஞ்சுக்கிட்டு இருக்கே... எங்க விருப்பத்துக்கு மாறாக நீ ஏதாவது செஞ்சா, நாங்க உயிரோடவே இருக்க மாட்டோம்!’ என ஜனனியின் பெற்றோர் கண்கலங்கியிருக்கின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்
தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்

ஜனனி, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கோவையில் வைத்து காதலன் சம்பத்தைத் திருமணம் செய்திருக்கிறார். திருமணமான தகவல் தெரிந்தால் தனது பெற்றோர் மனது மாற வாய்ப்பிருக்கிறது என எண்ணி, திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜனனி பெற்றோருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறார். அந்தப் புகைப்படங்களைப் பார்த்து அதிர்ந்துபோன ஜனனியின் பெற்றோர், ‘ஒரே மகள்னு செல்லம் கொடுத்து, அவதான் உலகம்னு இருந்தோமே... அவ இப்படிப் பண்ணிட்டாளே’ எனக் கதறி அழுதவர்கள், வாழைப்பழத்தில் விஷ மாத்திரையை வைத்து சாப்பிட்டிருக்கிறார்கள்.

பானிபூரியால் நிகழ்ந்த சோகம்; மனைவி தற்கொலை; அதிர்ச்சியில் கணவன்; போலீஸ் விசாரணை!

அடுத்த நாள் காலை வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பொன்னுசாமியும், அவருடைய மனைவி சுமதியும் இறந்து கிடந்திருக்கிறார்கள். ஹாலில் இருந்த கொக்கியில் தூக்கிட்டுக்கொள்வதற்காக இரண்டு கயிறுகளும் கட்டப்பட்ட நிலையில் இருந்திருக்கின்றன. இது குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த குன்னத்தூர் போலீஸார், உயிரிழந்த தம்பதியரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆசையாக வளர்த்த மகள் காதல் திருமணம் செய்துகொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாத பெற்றோர், விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குன்னத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு