Published:Updated:

புதுக்கோட்டை: மகளுக்குப் பாலியல் தொல்லை; தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை! - மகிளா நீதிமன்றம்

மாரிமுத்து
News
மாரிமுத்து

மாரிமுத்து மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மாரிமுத்துவுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 30,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (44). இவர் தனது 7 வயது மகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம் நடந்த இந்தச் சம்பவம் குறித்து மாரிமுத்துவின் மனைவி கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மாரிமுத்துவைக் கைதுசெய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணை முடிந்து இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா, மாரிமுத்து மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மாரிமுத்துவுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 30,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து மாரித்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒன்பது மாத காலத்துக்குள்ளே குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz