Published:Updated:

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு; 29 ஆண்டுகளாகத் தேடப்பட்டுவந்த தாவூத் கூட்டாளி கைது!

மும்பை வெடிகுண்டு ( கோப்புக் காட்சி )

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த தாவூத் இப்ராஹிம் கூட்டாளி வளைகுடா நாட்டில் கைதுசெய்யப்பட்டிருக்கிறான்.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு; 29 ஆண்டுகளாகத் தேடப்பட்டுவந்த தாவூத் கூட்டாளி கைது!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த தாவூத் இப்ராஹிம் கூட்டாளி வளைகுடா நாட்டில் கைதுசெய்யப்பட்டிருக்கிறான்.

Published:Updated:
மும்பை வெடிகுண்டு ( கோப்புக் காட்சி )

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். உலகத்தையே உலுக்கிய இந்த வெடிகுண்டுத் தாக்குதலை நடத்திய தாவூத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கிறான். அவனுடன் சேர்ந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்த அவனுடைய கூட்டாளிகள் பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் பதுங்கி வாழ்கின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தாவூத் இப்ராஹிமுடன் சேர்ந்து செயல்பட்ட அபு பக்கர் என்பவன் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸில் கைதுசெய்யப்பட்டிருக்கிறான். அபு பக்கர் பாகிஸ்தானில் சென்று வெடிகுண்டுகளை எப்படித் தயாரிப்பது, அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து கற்றுக்கொண்டு வந்தவன். அதோடு மும்பை தொடர் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு தேவையான ஆர்.டி.எஸ் வெடிமருந்துகளை பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரவும் முக்கியக் காரணமாக இருந்து செயல்பட்டான் என்று மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் அபு பக்கர், ஐக்கிய அரேபிய எமிரேட்ஸில் தங்கியிருப்பதை இந்திய உளவுத்துறை சமீபத்தில் தெரிந்துகொண்டு அந்த நாட்டுக்குத் தகவல் கொடுத்தது.

மும்பை குண்டுவெடிப்பு
மும்பை குண்டுவெடிப்பு
கோப்புக் காட்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதையடுத்து அபு பக்கர் கைதுசெய்யப்ட்டிருக்கிறான். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டும் இதே நாட்டில் கைதுசெய்யப்பட்டான். ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அப்போது தப்பிவிட்டான். இந்தியாவில் மிகவும் தேடப்படும் குற்றவாளியாகக் கருதப்படும் அபு பக்கரை 29 ஆண்டுகளாக சி.பி.ஐ தேடிவந்தது. தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள அபு பக்கரை இந்தியாவுக்கு நாடு கடத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அபு பக்கரின் உண்மையான பெயர் அபு பக்கர் அப்துல் கஃபார் ஷேக். தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான அபு பக்கர், தாவூத்தின் கூட்டாளியான முஸ்தாபா தோஷா என்பவனுடன் சேர்ந்து வளைகுடா நாடுகளிலிருந்து தங்கம், எலெக்ட்ரானிக்ஸ் போன்ற பொருள்களை மும்பைக்குக் கடத்திவரும் தொழில் செய்துவந்தான். இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற பிறகு பாகிஸ்தான் மற்றும் துபாயில் மாறி மாறி வசித்துவந்த அபு பக்கர், இரான் பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு துபாயில் தொழில் செய்துவந்தான். அவனைக் கைதுசெய்ய 1997-ம் ஆண்டு சிவப்பு எச்சரிக்கை நோட்டீஸ் விடப்பட்டது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமன் என்பவருக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அபு சலேம் என்பவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism