Published:Updated:

சேலம்: கத்தியைக் காட்டி மிரட்டி 15 பவுன் நகை பறிப்பு... சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழப்பு!

மரணம் ( சித்திரிப்புப் படம் )

இரண்டு பேர் மீண்டும் வந்து திடீரென நசீர்கானை கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கியதுடன், அவர் அணிந்திருந்த 15 பவுன் நகையை பறித்துச் சென்றுவிட்டனர்.

சேலம்: கத்தியைக் காட்டி மிரட்டி 15 பவுன் நகை பறிப்பு... சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழப்பு!

இரண்டு பேர் மீண்டும் வந்து திடீரென நசீர்கானை கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கியதுடன், அவர் அணிந்திருந்த 15 பவுன் நகையை பறித்துச் சென்றுவிட்டனர்.

Published:Updated:
மரணம் ( சித்திரிப்புப் படம் )

சேலம், சின்ன திருப்பதி பாண்டியன் தெருவிலுள்ள குடியிருப்பில் வசித்துவந்தவர் நசீர் கான். இவருடைய கணவர் ஹபீஸ்கான் பொதுப்பணித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி காலை 11 மணியளவில் இரண்டு பேர் வீடு வாடகைக்கு இருக்கிறதா என வந்து கேட்டிருக்கின்றனர். அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என நசீர் கான் கூறியிருக்கிறார். பின்னர் அந்த இரண்டு பேரும் சென்றுவிட்டனர். மாலை 3 மணிக்கு அதே இரண்டு பேர் மீண்டும் வந்து திடீரென நசீர் கானைக் கத்தியைக் காட்டி மிரட்டித் தாக்கியதுடன், அவர் அணிந்திருந்த 15 பவுன் நகையைப் பறித்துச் சென்று விட்டனர்.

செயின் பறிப்பு
செயின் பறிப்பு
Representational Image

இந்த நிலையில், கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி நசீர் கான் கடந்த மூன்று நாள்களாக அதிர்ச்சியிலேயே இருந்தார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் கொள்ளையர்கள் அவருடைய கை கால்களை மிதித்து நகைகளை பறித்திருக்கின்றனர். இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து, கன்னங்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவுசெய்து உதவி ஆணையர் சரவணகுமார் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளைத் தேடிவந்தனர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராகளை ஆய்வுசெய்து பார்த்து, சின்ன திருப்பதியைச் சேர்ந்த முஸ்தபா, ஜான்சன்பேட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோரைக் கைதுசெய்தனர்.

கொள்ளையர்
கொள்ளையர்

இவர்கள் மீது முன்னதாகவே வழிப்பறி தொடர்பான வழக்குகள் இருக்கின்றன. இவர்களுக்கு மூதாட்டி நசீர் கான் தனியாக இருப்பதாகத் தகவல் கொடுத்தது முஸ்தபாவின் சகோதரி என்று விசாரணையில் தெரியவந்தது.

நகை பறிப்பு
நகை பறிப்பு
சித்திரிப்புப் படம்

ஆனால், முஸ்தபாவின் சகோதரி தலைமறைவாகிவிட்டதால் போலீஸார் அவரைத் தேடிவருகின்றனர். அதேநேரத்தில் கைதான இரண்டு பேரையும் போலீஸார் உடனடியாகச் சிறையில் அடைத்துவிட்டனர். அவர்களிடமிருந்து நகைகளை மீட்க முடியவில்லை. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி நசீர் கான் நேற்று அதிகாலை உயிரிழந்தார். உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பரிசோதனைக்குப் பிறகு அவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கைதான கொள்ளையர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.