Published:Updated:

டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனை சர்வர் முடக்கம்... கிரிப்டோகரன்சியில் ரூ.200 கோடி கேட்கும் ஹேக்கர்கள்?!

டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் தொடர்ந்து 6-வது நாளாக முடங்கியிருக்கிறது. சர்வரை விடுவிக்க ஹேக்கர்கள் ரூ.200 கேட்டு மிரட்டிவருகின்றனர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனை சர்வர் முடக்கம்... கிரிப்டோகரன்சியில் ரூ.200 கோடி கேட்கும் ஹேக்கர்கள்?!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் தொடர்ந்து 6-வது நாளாக முடங்கியிருக்கிறது. சர்வரை விடுவிக்க ஹேக்கர்கள் ரூ.200 கேட்டு மிரட்டிவருகின்றனர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரை கடந்த ஆறு நாள்களுக்கு முன்பு ஹேக்கர்கள் ஹேக் செய்து, தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டனர். அதை மீண்டும் பழைய நிலைக்கு இன்னும் கொண்டு வர முடியவில்லை. சர்வரை விடுவிக்கவேண்டுமானால் ரூ.200 கோடி கொடுக்க வேண்டும் என்று ஹேக்கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவும் அந்தப் பணத்தை கிரிப்டோகரன்சியில்தான் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் பணம் கேட்டு எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். சர்வர் முடங்கியதால் எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் அனைத்தும் முடங்கிப்போயிருக்கின்றன. இதனால் நோயாளிகள் வருகை உட்பட அனைத்தும் தற்போது கம்ப்யூட்டர் இல்லாமல் நோட்டுப்புத்தகங்களில் எழுதப்பட்டு பணிகள் நடந்துவருகின்றன. நாடு முழுவதும் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் டேட்டாக்களை பேக்கப் எடுத்துவைத்துக்கொள்ளும்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``டேட்டாக்களைத் திரும்ப பெறுதல், சர்வர் பணிகள் நடந்துவருகின்றன.

டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனை சர்வர் முடக்கம்... கிரிப்டோகரன்சியில் ரூ.200 கோடி கேட்கும் ஹேக்கர்கள்?!

டேட்டாக்களின் அளவு அதிகமாக இருப்பதால் அதை மீட்டெடுப்பதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. சர்வர் இயங்காமல் இருப்பதால் மருத்துவமனையின் அனைத்துச் சேவைகளும் கம்ப்யூட்டர் இல்லாமல் செய்யப்பட்டுவருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எய்ம்ஸ் சர்வர் ஹேக் செய்யப்பட்டது குறித்து டெல்லி போலீஸார், உள்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது விசாரணை ஏஜென்சிகளின் பரிந்துரையின்பேரில் மருத்துவமனையின் கம்ப்யூட்டருக்கு இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. சர்வரில் விஐபி-க்கள், முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அதிகாரிகள், நீதிபதிகளின் தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன.

அதோடு சர்வர் ஹேக் செய்யப்பட்டிருப்பதால் 5 கோடி நோயாளிகளின் டேட்டாக்கள் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது எய்ம்ஸ் மருத்துமனையிலுள்ள கம்ப்யூட்டர்களுக்கு ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் பதிவேற்றம் செய்யப்பட்டுவருகிறது. மொத்தமுள்ள 5,000 கம்ப்யூட்டர்களில் 1,500 கம்ப்யூட்டர்களுக்கு ஆன்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு 50 சர்வர்களில் 20 சர்வர்கள் ஸ்கேன் செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.