Published:Updated:

வீடற்றவர்களைக் குறிவைத்த கிட்னி திருடர்கள்; `3 இடியட்ஸ்' படம் பார்த்து ஈர்க்கப்பட்டதாக `பகீர்’ தகவல்

கிட்னி திருடர்கள்

டெல்லியில் வீடற்ற ஏழைகளைக் குறிவைத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தியதாக 2 மருத்துவர்கள் உட்பட 11 பேர்மீது டெல்லி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கின்றனர்.

வீடற்றவர்களைக் குறிவைத்த கிட்னி திருடர்கள்; `3 இடியட்ஸ்' படம் பார்த்து ஈர்க்கப்பட்டதாக `பகீர்’ தகவல்

டெல்லியில் வீடற்ற ஏழைகளைக் குறிவைத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தியதாக 2 மருத்துவர்கள் உட்பட 11 பேர்மீது டெல்லி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கின்றனர்.

Published:Updated:
கிட்னி திருடர்கள்

டெல்லியில் குருத்வாராக்கள், மருத்துவமனைகளுக்கு வெளியே தங்கியிருக்கும் வீடற்ற, ஏழை இளைஞர்களைக் குறிவைத்து ஒரு கும்பல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுவந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்திருக்கின்றனர். மேலும், இது தொடர்பாக 6,000 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், ``வீடற்றவர்களைக் குறிவைத்து கிட்னி திருடப்பட்டுவருவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், இன்ஸ்பெக்டர்கள் பாரத் லால், ரோஹித் தலைமையிலான ஒரு காவல்துறை குழு டெல்லி, ஹரியானாவில் பல வாரங்களாகச் சோதனைகளை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து குற்றவாளிகள் கடந்த ஜூன் மாதம் கைதுசெய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் கடந்த ஆறு மாதங்களில் 14 முதல் 16 கிட்னி மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்தது தெரியவந்திருக்கிறது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான குல்தீப் ரே (46) ஆபரேஷன் தியேட்டர் டெக்னீஷியனாகப் பணிபுரிகிறார்.

கிட்னி
கிட்னி

மேலும், குல்தீப் ரே ராஜஸ்தான், ஹரியானாவிலுள்ள மற்ற கும்பல்களுடன் சேர்ந்து சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்திருக்கிறது. '3 இடியட்ஸ்' திரைப்படத்தைப் பார்த்து ஈர்க்கப்பட்டதாகவும், அவர் தன்னை ஒரு திறமையான அறுவை சிகிச்சை நிபுணர் என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார். விசாரணையின்போதுகூட அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை. அனைத்து அறுவை சிகிச்சைகளும் அவரால் மட்டுமே செய்யப்பட்டிருக்கின்றன.

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட டாக்டர்களான சௌரப் மிட்டல் (37), பிரியான்ஷ் (30) ஆகியோர் டெல்லியிலுள்ள பிரபல மருத்துவமனைகளில் பணிபுரிந்திருக்கின்றனர். ஆனால் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் இந்தக் கும்பலோடு இணைந்திருக்கின்றனர். இந்த டாக்டர்களுக்கு ஓர் அறுவை சிகிச்சைக்கு ரூ.1.5 முதல் ரூ.2.5 லட்சம் வரை வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. குற்றவாளிகளில் மற்றொருவர் சோனு ரோஹில்லா. இவர் போலி மருத்துவர். ஹரியானாவின் கோஹானாவில் சட்டவிரோத மருத்துவமனை நடத்திவருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காவல்துறை
காவல்துறை

மாற்று அறுவை சிகிச்சை நடந்த இவரது மருத்துவமனையைத்தான் பயன்படுத்தியிருக்கின்றனர். குற்றவாளிகளின் ஒரு குழு மருத்துவமனைகளிலிருந்து 20 வயது இளைஞர்களின் பட்டியலை எடுக்கிறார்கள். இன்னொரு குழு அவர்களை அணுகி, நம்பிக்கையாகப் பேசி சம்மதிக்கச் செய்து அறுவை சிகிச்சைக்கு அனுப்பிவைக்கிறார்கள். மருத்துவர்கள்குழு அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறது. இப்படி இந்தக் கும்பலில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு கிட்னிக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பெறப்பட்டிருக்கிறது. மொத்தத் தொகையில் ரூ.1.5 லட்சம் - ரூ.2.5 லட்சம் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு, ரூ.1.5 லட்சம் கிட்னி வழங்கியவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள பணத்தை குல்தீப்பும், அவர் கூட்டாளிகளும் பிரித்துக்கொண்டிருக்கின்றனர்" எனத் தெரிவித்தனர்.