Published:Updated:

``இறந்துபோன என் தந்தை மீண்டும் உயிருடன் வருவார்!" - 2 மாதக் குழந்தையை நரபலிக்காகக் கடத்திய பெண் கைது

நரபலி ( சித்திரிப்புப் படம் )

இறந்தபோன தன் தந்தையை உயிருடன் மீட்க, இரண்டு மாதக் குழந்தையை கடத்தி, நரபலி கொடுக்க முயன்ற பெண் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

``இறந்துபோன என் தந்தை மீண்டும் உயிருடன் வருவார்!" - 2 மாதக் குழந்தையை நரபலிக்காகக் கடத்திய பெண் கைது

இறந்தபோன தன் தந்தையை உயிருடன் மீட்க, இரண்டு மாதக் குழந்தையை கடத்தி, நரபலி கொடுக்க முயன்ற பெண் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
நரபலி ( சித்திரிப்புப் படம் )

டெல்லியில், திருமணமானமாகி 20 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாத தம்பதி, ஐ.வி.எஃப் மூலம் மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றிருக்கிறார்கள். அந்தக் குழந்தை மருத்துவமனையில் இருந்தபோது தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்தக் குடும்பத்துடன் அறிமுகமாகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, குழந்தையின் வளர்ச்சி குறித்து கண்காணிக்க வேண்டும் என தம்பதியின் வீட்டு முகவரியையும் பெற்றுச் சென்றிருக்கிறார் அந்தப் பெண்.

இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி குறிப்பிட்ட தம்பதியின் இல்லத்துக்குச் சென்ற ஸ்வேதா என்ற அந்தப் பெண், ``மருத்துவப் பரிசோதனைக்காகக் குழந்தையைக் கொண்டு செல்ல வேண்டும். எனவே, குழந்தையை என்னுடன் வெளியே அனுப்பிவையுங்கள்" எனக் கேட்டிருக்கிறார். குழந்தையின் தாய், தன்னுடைய உறவினரான பெண் ஒருவரைத் துணைக்கு அனுப்பிவைத்திருக்கிறார். உறவுக்காரப் பெண்ணும் ஸ்வேதாவும் குழந்தையுடன் சேர்ந்து வெளியே சென்ற நிலையில், அங்கிருந்து ஸ்வேதா அந்தப் பெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்திருக்கிறார்.

நரபலி
நரபலி
சித்திரிப்புப் படம்

அதைக் குடித்து அந்தப் பெண் மயங்கியவுடன், குழந்தையைக் கடத்தியிருக்கிறார். தன் குழந்தை கடத்தப்பட்டதை அறிந்த தாய், காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பான காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகியிருந்த நிலையில், அதனடிப்படையில் காவல்துறை உடனே அந்தப் பெண்ணைப் பிடித்து, குழந்தையை மீட்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியது.

 2 மாதக் குழந்தை
2 மாதக் குழந்தை

இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர், ``ஒரு மாத காலத்துக்கு முன்பு இறந்த தன் தந்தையை மீண்டும் உயிரோடு மீட்டுக் கொண்டுவர நரபலி கொடுக்க முடிவுசெய்திருக்கிறார் அந்தப் பெண். அதனால், அதற்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தார். அந்தப் பெண், காரில் குழந்தையுடன் தெருக்களில் இரவு முழுவதும் சுற்றியிருக்கிறார். 102 டிகிரி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், குழந்தையை மீட்டோம். நீண்ட நேரமாக குழந்தைக்குச் சரியாக உணவு வழங்கப்படவில்லை. அந்தப் பெண் மீது வழக்குபதியப்பட்டிருக்கிறது. சிசிடிவி-யின் உதவியுடன் அந்தப் பெண்ணை நாங்கள் கைதுசெய்திருக்கிறோம்'' என்றனர்.