Published:Updated:

கர்நாடகா: நிராகரிக்கப்பட்ட கடன் விண்ணப்பம்! - வங்கிக்கு தீவைத்த நபரால் பரபரப்பு

கைது
News
கைது

வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே பெட்ரோல் ஊற்றினார். பின்னர் அலுவலகத்துக்குத் தீவைத்தார்.

கர்நாடகாவின் ரட்டிஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வாசிம் ஹசரத்சாப் முல்லா. 33 வயதாகும் இவர், கனரா வங்கியில் கடன் பெற விண்ணப்பித்திருந்தார். கடந்த சனிக்கிழமை (08-01-2021) அன்று இவரின் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்ததன் காரணமாகக் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த முல்லா, சனிக்கிழமை இரவு, கர்நாடகாவின் காகினேலி காவல் எல்லைக்குள் வரும் ஹெடுகொண்டா கிராமத்திலுள்ள, அந்த வங்கிக் கிளைக்கு வந்தார். வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே பெட்ரோலை ஊற்றினார். பின்னர் அலுவலகத்துக்குத் தீவைத்தார். அவ்வழியாகச் சென்றவர்கள் புகைமூட்டத்தைக் கண்டு காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

கடன்
கடன்

அங்கிருந்து தப்பி ஓட முயன்ற முல்லாவையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஹவேரி பகுதி தீயணைப்பு வீரர்கள் வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதற்கிடையே, தீ பரவியதால் 12 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஐந்து கம்ப்யூட்டர்கள், மின்விசிறிகள், விளக்குகள், பாஸ்புக் பிரின்ட்டர், பணம் எண்ணும் இயந்திரம், ஆவணங்கள், சிசிடிவி, கேஷ் கவுன்ட்டர்கள் தீயில் சேதமடைந்தன.

arrest
arrest
representational image

குற்றம்சாட்டப்பட்டவர் கைதுசெய்யப்பட்டு அவர் மீது காகினெல்லி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 436 - தீ / வெடி பொருள்கள் கொண்டு சேதம் விளைவித்தல், ஐபிசி 477 - பிறர்/பொது மக்களுக்குக் கேடு விளைவித்தல், ஐபிசி 453 - அத்துமீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.