Published:Updated:

`அம்மாவுக்கு பிறந்தநாள், ஆனால் விஷ் பண்ண முடியலை’ - விடுதியில் விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவன்

தற்கொலை

காலையில் சிறுவனைத் தூக்கில் தொங்கியநிலையில் பார்த்த மாணவர்கள் பள்ளி நிர்வாகத்துக்குத் தகவல் அளித்துள்ளனர்.

`அம்மாவுக்கு பிறந்தநாள், ஆனால் விஷ் பண்ண முடியலை’ - விடுதியில் விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவன்

காலையில் சிறுவனைத் தூக்கில் தொங்கியநிலையில் பார்த்த மாணவர்கள் பள்ளி நிர்வாகத்துக்குத் தகவல் அளித்துள்ளனர்.

Published:Updated:
தற்கொலை

பெங்களூரில் ஹோசகோட்டில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி, பூர்வராஜ் (14) என்கிற மாணவர் படித்துவந்தார். அந்த விடுதி மிகுந்த கட்டுப்பாட்டுடன் இயங்கிவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி பூர்வராஜின் தாயாருக்குப் பிறந்தநாள். ஒவ்வொரு வருடமும் அம்மாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறும் பூர்வராஜ் இந்த வருடமும் அம்மாவுக்கு வாழ்த்து கூற வார்டனிடம் அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால் வார்டன் பூர்வராஜைப் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதேநேரம் பூர்வராஜின் பெற்றோரும் அவரிடம் பேச முயன்றதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களுக்கும் பூர்வராஜுடன் பேச அனுமதி அளிக்கவில்லை.

தற்கொலை
தற்கொலை

இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான பூர்வராஜ் யாரிடமும் பேசாமல் மௌனமாகவே இருந்திருக்கிறார். இறுதியில், நள்ளிரவில் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை, "காலையில் சிறுவனைத் தூக்கில் தொங்கியநிலையில் பார்த்த மாணவர்கள் பள்ளி நிர்வாகத்துக்குத் தகவல் அளித்துள்ளனர். நிர்வாகம் காவல்துறைக்குத் தகவல் அளித்தது. பெற்றோருக்குச் சிறுவனின் மரணம் தொடர்பாகத் தகவல் அளிக்கப்பட்டு அவர்களும் வந்திருக்கிறார்கள். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. மேலும் தற்கொலை தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism