Published:Updated:

தேனி: `ஆன்லைன் வகுப்பு புரியவில்லை..!' - மனமுடைந்த 10 -ம் வகுப்பு மாணவன் தற்கொலை

அபிஷேக்
அபிஷேக்

`பள்ளி ஆசிரியர் நடத்திய ஆன்லைன் வகுப்பு பாடம் புரியவில்லை’ என்று கூறி, மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கான்ட்ராக்டர் பாண்டி. இவரின் மனைவி மீனா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகன் அபிஷேக் (வயது 15), கொடைக்கானலிலுள்ள தனியார் பள்ளியில் படித்துவருகிறார். 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நிலையில், 10 வகுப்புக்கான பாடங்களை பள்ளி நிர்வாகம் ஆன்லைன் வகுப்பு மூலம், ஆசிரியர்களைவைத்து கற்றுக் கொடுத்துவருகிறது. அபிஷேக் வீட்டிலிருந்து மொபைல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பில் கடந்த சில வாரங்களாகப் பாடங்களைப் படித்துவந்திருக்கிறார். இந்நிலையில், சில பாடங்கள் அபிஷேக்குக்குச் சரிவரப் புரியவில்லை என்றும், அதனால் ஆன்லைன் வகுப்பைத் தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆண்டிபட்டி
ஆண்டிபட்டி
தேனி: `அழிக்கப்பட்ட படம்; சிக்க வைத்த செல்போன்!’ - கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி

ஆன்லைன் வகுப்புக்குச் செல்லாதது குறித்து பாண்டிக்கு தெரியவர, அவர் அபிஷேக்கைக் கண்டித்திருக்கிறார். தொடர்ந்து புரியாத ஆன்லைன் பாடங்களைக் கற்றுக்கொள்ள மனம் இல்லாத அபிஷேக், மனமுடைந்து நேற்று இரவு உணவு சாப்பிடாமல் தூங்கச் சென்றிருக்கிறார். குடும்ப உறுப்பினர்களும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், இன்று அதிகாலையில், திடீரென அபிஷேக்குக்கு வலிப்பு வந்திருக்கிறது. பதறிய குடும்பத்தினர் அபிஷேக்கிடம் விசாரிக்க, தான் விஷம் குடித்ததாகச் சொல்லியிருக்கிறார்.

தேனி அரசு மருத்துவமனை
தேனி அரசு மருத்துவமனை
`கேரளாவில் தாக்கப்படும் தேனி லாரிகள்; இரு மாநிலப் பிரச்னை அபாயம்!’ - கொதிக்கும் உரிமையாளர்கள்

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக அபிஷேக்கை தேனி `கானா’ விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில், அபிஷேக்கைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வழியிலேயே இறந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர். ஆண்டிபட்டி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள். மாணவனின் உடல், பிரேத பரிசோதனைக்குப் பின்னர், பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அபிஷேக்
அபிஷேக்
தேனி: `திருமணமானவருடன் பழக்கம்!’ - மகளைக் கொன்று தற்கொலை நாடகமாடிய தந்தை

ஆன்லைன் வகுப்புக்கு எதிராகப் பலரும் கருத்து தெரிவித்துவரும் சூழலில், `ஆன்லைன் வகுப்பு பாடம் புரியவில்லை’ எனக் கூறி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தேனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு