Published:Updated:

``மன உளைச்சல்; தற்கொலை எண்ணம் அடிக்கடி வருகிறது” - டி.ஜி.பி-க்கு பெண் டி.எஸ்.பி அதிர்ச்சிக் கடிதம்

டி.ஜி.பி சைலேந்திரபாபு

``தற்போது தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. தயவுசெய்து என் உயிரைக் காப்பாற்ற, பணிச்சுமை குறைந்த சேவை பயிற்சி மையம் அல்லது போலீஸ் பயிற்சி மையம் அல்லது பட்டாலியன் போன்ற இடங்களுக்கு என்னை மாற்ற வேண்டுகிறேன்.”

``மன உளைச்சல்; தற்கொலை எண்ணம் அடிக்கடி வருகிறது” - டி.ஜி.பி-க்கு பெண் டி.எஸ்.பி அதிர்ச்சிக் கடிதம்

``தற்போது தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. தயவுசெய்து என் உயிரைக் காப்பாற்ற, பணிச்சுமை குறைந்த சேவை பயிற்சி மையம் அல்லது போலீஸ் பயிற்சி மையம் அல்லது பட்டாலியன் போன்ற இடங்களுக்கு என்னை மாற்ற வேண்டுகிறேன்.”

Published:Updated:
டி.ஜி.பி சைலேந்திரபாபு

``பணிச்சுமையின் காரணமாக கடும் மன உளைச்சலில் இருக்கிறேன். மன உளைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அடிக்கடி வருகிறது. என்னை வேறு டிப்பார்ட்மென்ட்டுக்கு மாற்றுங்கள்" என்று பெரம்பலூர் டி.எஸ்.பி ஒருவர் டி.ஜி.பி-க்குக் கடிதம் எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர்
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு டி.எஸ்.பி-ஆக இருப்பவர் சந்தியா. இவர், நேரடியாக டி.எஸ்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மங்களமேடு சரகத்துக்குக் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவர், பணியில் சேர்ந்த நாளிலிருந்தே `வீட்டையும், போலீஸ் வேலையையும் சரியாக கவனிக்க முடியவில்லை’ என்றும், `இதே வேலையைச் செய்துகொண்டிருந்தால் எனது குடும்பத்தை விட்டுவிடுவேன்போல’ என்றும் அடிக்கடி சக போலீஸாரிடம் பேசியிருக்கிறாராம்.

போலீஸ்
போலீஸ்

டி.எஸ்.பி சந்தியா கடந்த ஒரு மாதமாகச் சென்னையில் பயிற்சியில் இருக்கிறார். இந்தப் பயிற்சி, இந்த மாத இறுதியில் முடிவடையவிருக்கிறது. இந்நிலையில், டி.எஸ்.பி சந்தியா, டி.ஜி.பி-க்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருக்கிறார். இந்தக் கடிதம், கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

அந்தக் கடிதத்தில், ``சட்டம், ஒழுங்கு பணிகள் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை என்னால் தாங்க முடியவில்லை. எனக்கு உடல்நலப் பிரச்னைகள் உள்ளன. பணிச்சுமையால் பெரிதும் மன உளைச்சல் ஏற்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. என் கணவர், பெற்றோர், மாமியார்/மாமியார் ஆகியோருடன் நல்ல குடும்ப வாழ்க்கை இருக்கிறது. இருப்பினும் பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருக்கிறேன். தயவுசெய்து என் உயிரைக் காப்பாற்ற பணிச்சுமை குறைந்த சேவை பயிற்சி மையம், போலீஸ் பயிற்சி மையம், பட்டாலியன் போன்ற இடங்களுக்கு என்னை மாற்ற வேண்டுகிறேன்” என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கடிதம் போலீஸார் வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்
பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்

இது குறித்து பெரம்பலூர் எஸ்.பி மணியிடம் பேசினோம். ``டி.எஸ்.பி வொர்க் லோடு அதிகமாக இருப்பதாக டி.ஜி.பி-யிடம் கடிதம் அனுப்பியிருக்கிறார். அப்படி என்னதான் வேலைப்பளு என்று நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். இவர், நேரடியாக டி.எஸ்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு வந்திருக்கிறார். மற்ற அதிகாரிகளிடம் அவரைப் பற்றிக் கேட்டுப்பாருங்கள். என்னைப் பற்றியும் சக போலீஸாரிடம் கேட்டுப்பாருங்கள். என்னிடம் வேலை பார்க்க முடியாதவர்கள் எங்குமே வேலை பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அதிகாரிகளை மென்மையாகக் கையாளுவேன். ஆனால் இவர் எதற்காக இப்படிக் கடிதம் கொடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை”. என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism