Published:Updated:

3,325 ரௌடிகள் கைது! - ஆபரேஷன் டிஸ்ஆர்ம்-க்குப் பிறகு டி.ஜி.பி அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் காவல்துறை நடத்திய டிஸ்ஆர்ம் ஆபரேஷனுக்குப் பிறகு அரிவாள், கத்தி விற்பனை தொடர்பாக டி.ஜி.பி அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் தொடர்ந்து நடந்த கொலைச் சம்பவங்களுக்குப் பிறகு கடந்த 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆபரேஷன் டிஸ்ஆர்ம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் நடந்த தேடுதல் வேட்டையில் 3,325 ரௌடிகள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1,110 கத்திகள், ஏழு கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களைத் தயார் செய்யும் உரிமையாளர்கள், விற்பனையாளர்களுடன் ஒவ்வொரு காவல் நிலையம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் நடந்த 579 கூட்டங்களில் 2,548 பேர் கலந்துககொண்டனர். கூட்டத்தில் காவல்துறை சார்பில் ஆலோசனைகளும் அறிவுகரைகளும் வழங்கப்பட்டன.

அரிவாள் தயாரிக்கும் பணி
அரிவாள் தயாரிக்கும் பணி
 ‘ஏ ப்ளஸ்’ ரௌடிகள் எஸ்கேப்! - கைது நடவடிக்கைகள் கண்துடைப்பா?

அதன் தொடர்ச்சியாக கத்தி, வாள், வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பைக் கண்காணிக்கவும் இது போன்ற ஆயுதங்கள் தவறானவர்கள் கைகளுக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு, அனைத்து கமிஷனர்களுக்கும் மாவட்ட எஸ்.பி-க்களுக்கும் ஓர் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். அதில், `அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பவர்கள் தயாரிக்கும் இடங்களைக் கண்டறிய வேண்டும். பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, செல்போன் நம்பர், எந்தக் காரணத்துக்காக வாங்குகிறார் போன்றவற்றைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

விவசாயம், வீட்டு உபயோகம் அல்லாமல் மற்ற காரணங்களுக்காக கத்தி போன்ற ஆயுதங்களை அடையாளம் தெரியாதவர்களிடம் விற்பனை செய்யக் கூடாது. சிசிடிவி கேமராக்களைக் கடை, பட்டறைகளில் பொருத்த வேண்டும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டால் காவல்துறை உதவி செய்ய வேண்டும். குற்றவாளிகள் பற்றிய தகவல்களை காவல்துறைக்குத் தெரிவிப்பவர்களுக்கு தக்க வெகுமதி வழங்க வேண்டும். அதன்படி ஒவ்வொரு காவல் நிலைய அதிகாரியும் (இன்ஸ்பெக்டர்) மேற்கண்ட அறிவுரைகளை செயல்படுத்த வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு