Published:Updated:

``முடிந்தால் கண்டுபிடியுங்கள்..!" - தூம் பட பாணியில் கொள்ளையடித்துவிட்டு சவால்விட்ட கொள்ளையர்கள்

எழுதப்பட்ட கரும்பலகை ( ட்விட்டர் )

``தூம் 4... நாங்கள் விரைவில் மீண்டும் வருவோம். முடிந்தால் எங்களைக் கண்டுபிடியுங்கள்" என எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். மேலும், ஒரு செல்போன் நம்பரும் அதில் எழுதப்பட்டிருந்தது.

``முடிந்தால் கண்டுபிடியுங்கள்..!" - தூம் பட பாணியில் கொள்ளையடித்துவிட்டு சவால்விட்ட கொள்ளையர்கள்

``தூம் 4... நாங்கள் விரைவில் மீண்டும் வருவோம். முடிந்தால் எங்களைக் கண்டுபிடியுங்கள்" என எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். மேலும், ஒரு செல்போன் நம்பரும் அதில் எழுதப்பட்டிருந்தது.

Published:Updated:
எழுதப்பட்ட கரும்பலகை ( ட்விட்டர் )

ஒடிசா மாநிலம், நபரங்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது இந்திராவதி மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சனி, ஞாயிறு இரு தினங்களும் விடுமுறை என்பதால், பள்ளியின் பியூன் இன்று காலை வழக்கம்போல பள்ளியைத் திறந்திருக்கிறார். அப்போது, பள்ளி தலைமையாசிரியரின் அறைக்கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி பியூன், உடனடியாகப் பள்ளி நிர்வாகத்தினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

உடனடியாகப் பள்ளிக்கு விரைந்த நிர்வாகிகள், தலைமையாசிரியர் அறையிலிருந்த கரும்பலகையில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கொள்ளையர்கள் எழுதிய கரும்பலகை
கொள்ளையர்கள் எழுதிய கரும்பலகை
ட்விட்டர்

பள்ளிக்குள் நுழைந்த கொள்ளையர்கள், தலைமை ஆசிரியர் அறையிலிருந்த கணினிகள், அச்சகங்கள், நகல் எந்திரங்கள், எடை இயந்திரங்கள் மற்றும் ஒலிபெருக்கிகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர். அங்கிருந்த கரும்பலகையில், ``தூம் 4... நாங்கள் விரைவில் மீண்டும் வருவோம். முடிந்தால் எங்களைக் கண்டுபிடியுங்கள்" என எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். மேலும், ஒரு செல்போன் நம்பரும் அதில் எழுதப்பட்டிருந்தது.

பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக இது குறித்து நாபரங்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தூம் பட ஸ்டில்
தூம் பட ஸ்டில்

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், பள்ளியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக, ``அந்த கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும் செல்போன் எண் எங்களைத் திசைதிருப்ப எழுதப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம்" என்று தெரிவிக்கிறார்கள் காவல்துறையினர்.