Published:Updated:

FACT CHECK: `128 கிலோ தங்கம்; ரூ.150 கோடி பணம்' - திருப்பதி கோயில் அர்ச்சகர் வீட்டில் பிடிபட்டதா?

FACT CHECK - திருப்பதி அர்ச்சகர்

இந்த வீடியோவைப் பகிரும் பலரும், `இது திருப்பதி கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட நகைகள்' என்பது போன்ற கருத்துகளைப் பதிவுசெய்திருக்கின்றனர். உண்மை என்ன?!

FACT CHECK: `128 கிலோ தங்கம்; ரூ.150 கோடி பணம்' - திருப்பதி கோயில் அர்ச்சகர் வீட்டில் பிடிபட்டதா?

இந்த வீடியோவைப் பகிரும் பலரும், `இது திருப்பதி கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட நகைகள்' என்பது போன்ற கருத்துகளைப் பதிவுசெய்திருக்கின்றனர். உண்மை என்ன?!

Published:Updated:
FACT CHECK - திருப்பதி அர்ச்சகர்

கடந்த சில தினங்களாக தங்க, வைர நகைகள் மேசைமீது அடுக்கிவைக்கப்பட்டிருப்பது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோவைப் பகிரும் பலரும், `இது திருப்பதி கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட நகைகள்' என்பது போன்ற கருத்துகளைப் பதிவுசெய்திருக்கின்றனர். உண்மை என்ன?!

வைரலாகும் வீடியோ!

வைரலாகும் அந்த வீடியோவில், தங்க, வைர நகைகள் ஒரு மிக நீண்ட மேசையில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. காவல்துறையினர் பிடிபட்ட நகைகள் குறித்து செய்தியாளர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. `திருப்பதி கோயிலில் பணியாற்றும் 16 அர்ச்சகர்களில் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது 150 கோடி ரூபாய் பணம், 128 கிலோ தங்கம், 70 கோடி மதிப்புள்ள வைர நகைகள் ஆகியவை பிடிபட்டிருக்கின்றன.' - இதுதான் இந்த வீடியோவைப் பகிரும் பெரும்பாலானவர்கள் பதிவிட்டிருக்கும் செய்தி.

ஃபேஸ்புக்கில் ஒரே செய்தியுடன் பகிரப்பட்ட காணொலிகள்
ஃபேஸ்புக்கில் ஒரே செய்தியுடன் பகிரப்பட்ட காணொலிகள்

இந்தச் செய்தியை இந்தி, ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழிகளிலும் பதிவிட்டு, பலரும் இந்தக் காணொளியை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்துவருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உண்மை என்ன?!

இந்தக் காணொளி குறித்த உண்மைத்தன்மையை உறுதிசெய்ய, தேடலில் இறங்கினோம். அப்போது, சமூக ஊடகங்களில் பரவிவருவது போலிச் செய்தி என்பது நமக்குத் தெரியவந்தது. மேலும், இந்தக் காணொளியில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் நகைகள், கடந்த ஆண்டு இறுதியில் வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருடுபோனவை என்பதையும் தெரிந்துகொண்டோம்.

சிசிடிவி காட்சி - வேலூர் கொள்ளைச் சம்பவம்
சிசிடிவி காட்சி - வேலூர் கொள்ளைச் சம்பவம்

கடந்த ஆண்டு, டிசம்பர் 14-ம் தேதி அன்று, வேலூரிலுள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் பின்பக்கச் சுவரைத் துளையிட்டுத் தங்க நகைகள் திருடப்பட்டன. டிசம்பர் 20-ம் தேதி அன்று, அந்தக் கொள்ளையர்கள் காவல்துறையிடம் சிக்கினர். அதன் பின்னர், காவல்துறையினர் கொடுத்த பிரஸ் மீட்டில் எடுக்கப்பட்ட காணொளிதான் தற்போது வேகமாகப் பரவிவருகிறது. இந்தச் சம்பவம் குறித்து நமது விகடன் டிஜிட்டல் தளத்தில் விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம். காவல்துறையின் பிரஸ் மீட்டை `ஜூனியர் விகடன்' ஃபேஸ்புக் தளத்தில் லைவ் செய்திருந்தோம். இதன் மூலம், இந்தக் காணொளியில் இடம்பெற்றிருப்பது திருப்பதி கோயில் அர்ச்சகரின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டவை இல்லை என்பதும், வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருடுபோனவை என்பதும் உறுதியாகிறது!

மேலும், `திருப்பதி அர்ச்சகர் வீட்டில் பிடிபட்ட நகைகள்' என்ற போலிச் செய்தி கடந்த ஆண்டு இறுதியிலும், இந்த ஆண்டின் தொடக்கத்திலும் தீயாகப் பரவியிருக்கிறது. தற்போது மீண்டும் அந்தக் காணொளி அதே போலிச் செய்தியுடன் பரவிவருவது குறிப்பிடத்தக்கது.