Published:Updated:

`யாரையும் சும்மாவிடக் கூடாது’ ; பாலியல் தொந்தரவு?! - தற்கொலை செய்துகொண்ட கோவைச் சிறுமி எழுதிய கடிதம்

பாலியல் தொந்தரவால் கோவையில் 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்துவந்த 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்தார். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த மாணவி, அறையிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மரணம்
மரணம்
சித்திரிப்புப் படம்
கோவை: புகார் கொடுக்க வந்த திருநங்கை... காவலர்மீது பாலியல் வழக்கு பதிவு!

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையே, உயிரிழந்த மாணவி எழுதிவைத்த கடிதம் ஒன்று போலீஸாரிடம் சிக்கியிருக்கிறது. மாணவி இதற்கு முன்னதாக கல்வி பயின்றுவந்த சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றிவரும் ஒருவர், மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாக உயிரிழந்த மாணவியின் பெற்றோர் புகார் அளித்திருக்கின்றனர்.

தற்கொலை
தற்கொலை
சித்தரிப்புப் படம்

பள்ளி ஆசிரியரின் பாலியல் சீண்டல்களால்தான், மாணவி தற்கொலை செய்துகொண்டதாக அவர் உறவினர்களும், சக மாணவர்களும் குற்றம்சாட்டியிருக்கின்றனர். மேலும், பள்ளியில் பல மாணவிகளுக்கும் அந்த ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, புகார்கள் எழுந்திருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி எழுதியிருக்கும் கடிதத்தில், `யாரையும் சும்மாவிடக் கூடாது. ரீத்தாவோட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார் ***** யாரையும் விடக் கூடாது" என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆசிரியரின் பாலியல் சீண்டல் காரணமாக பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை என்று கூறி மாணவி மாற்றுச் சான்றிதழ் பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகே அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் அவர் சேர்ந்து படித்துவந்தார்.

கடிதம்
கடிதம்

தங்கள் மகளுக்கு நேர்ந்த கொடுமை வேறு எந்த மாணவிக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று ஆதங்கப்படும் பெற்றோர், தங்கள் மகளின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றனர்.

மாணவி, தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவர்கள் யார் என்பது குறித்தும், அவர் செல்போனைப் பறிமுதல் செய்தும், போலீஸார் விசாரித்துவருகின்றனர். இது குறித்து சின்மயா வித்யாலாய பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி கூறுகையில், ``கடந்த செப்டம்பர் மாதமே மாணவித் தரப்பில் மாற்றுச் சான்றிதழ் கேட்டனர்.

சின்மயா பள்ளி
சின்மயா பள்ளி

அப்போதே அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்துவிட்டோம். அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை” என்றவர், குறிப்பிட்ட ஆசிரியர் குறித்துப் பேச மறுத்துவிட்டார். அந்த ஆசிரியர் இந்தக் கல்வியாண்டில் வகுப்பெடுக்கவில்லை என்றும் அவரின் மனைவியும் அதே பள்ளியில் பணிபுரிந்துவருகிறார் என்றும் கூறப்படுகிறது. பாலியல் தொந்தரவு காரணமாக, பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு