Published:Updated:

`காரில் கைப்பையைக் களவாடிய ஊர்க்காவல் படைக் காவலர்?!’ - வைரல் வீடியோவும் போலீஸ் விளக்கமும்!

காவலர்
காவலர்

``அரவிந்தன் காரிலிருந்து பேக்கை திருடிச் சென்றதாக நீங்கள் கருதினால் புகார் கொடுங்கள். அவர்மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கிறோம்" என்று கூறினோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாகப்பட்டினத்தில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த காவலர் ஒருவர் காரிலிருந்த பெண்மணி ஒருவரின் கைப்பையைத்  திருடிச் சென்றபோது, கையும் களவுமாகப் பிடிபட்டதாக ஒரு காட்சி வலைதளங்களில் பரபரப்பாக வைரலாகிவருகிறது.

காவலர்
காவலர்

கொரோனா பரவலைத்  தடுக்க முக்கிய இடங்களில் மக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நாகூர் கடற்கரைப் பகுதிக்கு யாரும் செல்லாதவாறு தடுப்பதற்கு ஊர்க்காவல் படையைச்  சேர்ந்த அரவிந்தன் என்பவர் பணியில் இருந்திருக்கிறார். அப்போது முத்துப்பேட்டையைச் சேர்ந்த ஒரு தம்பதியர் அங்கு காரில் வந்திருக்கின்றனர். கணவர் காரைவிட்டு இறங்கி, சற்று தூரத்துக்குச் செல்ல மனைவி மட்டுமே காரில் இருந்திருக்கிறார்.

அப்போது காரை உடனடியாக எடுக்கச் சொல்லி வற்புறுத்திய காவலர் அரவிந்தன், திடீரென காரிலிருந்த அந்தப் பெண்மணியின் கைப்பையை எடுத்துக்கொண்டு டூ வீலரில்  தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார்.  அரவிந்தன் மது போதையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவரைச்  சுற்றிவளைத்த அப்பகுதி இளைஞர்கள், `மக்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டிய காவலரே திருடிச் செல்லலாமா?’  என்று சரமாரி  கேள்வி கேட்டு வீடியோ எடுக்க, அரவிந்தன் கைகள் இரண்டையும் தூக்கி `நான் சரண்டர்’ என்று கூறியிருக்கிறார்.

`தமிழக டாஸ்மாக் கடைகளுக்காகத் தயாரான போலி மதுபானங்கள்?' - அதிகாரிகள் துணையோடு கூட்டுக் கொள்ளை?!

அதன் பிறகு நடந்தது என்ன? போலீஸ் தரப்பில் விசாரித்தோம்.

``காரை உடனடியாக  எடுக்காததால் கடுப்பான அரவிந்தன் காரிலிருந்த பையை எடுத்துக்கொண்டு, `போலீஸ் ஸ்டேஷனில் வந்து வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றுதான் வந்திருக்கிறார்.

நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்

அரவிந்தன் செய்தது தவறு. அந்த காரைதான் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். அங்கு சென்று  விசாரணை செய்த நாங்கள், ``அரவிந்தன் காரிலிருந்து பேக்கை திருடிச் சென்றதாக நீங்கள் கருதினால்  புகார் கொடுங்கள். அவர்மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கிறோம்" என்று கூறினோம். ஆனால் அவர்கள் புகார் தர முன்வரவில்லை. பேக்கைத் திருப்பி வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர். அத்துடன் இந்தப் பிரச்னை முடிந்துவிட்டது" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு