Published:Updated:

தஞ்சை: கிறிஸ்துவ மதத்துக்கு மாறச் சொல்லி அழுத்தம்? தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி - போலீஸ் விசாரணை

பள்ளி மாணவி தற்கொலை

கிறிஸ்துவ மதத்துக்கு மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதால், பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தஞ்சை: கிறிஸ்துவ மதத்துக்கு மாறச் சொல்லி அழுத்தம்? தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி - போலீஸ் விசாரணை

கிறிஸ்துவ மதத்துக்கு மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதால், பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பள்ளி மாணவி தற்கொலை

தஞ்சாவூர் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் செயல்பட்டுவந்த ஹாஸ்டலில் தங்கிப் படித்த மாணவி ஒருவரை ஹாஸ்டல் வார்டன் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதனால், ஆத்திரமடைந்தவர்கள் அந்த மாணவியை கழிவறையைச் சுத்தம் செய்யச் சொல்லி கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூய இருதய மேல்நிலைப் பள்ளி
தூய இருதய மேல்நிலைப் பள்ளி

அரியலூர் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம் (47). இவரின் முதல் மனைவி கனிமொழி, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்தத் தம்பதியருக்கு 17 வயதில் ஒரு மகள். முதல் மனைவி இறந்த பின்பு, முருகானந்தம் சரண்யா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து, முருகானந்தம் தன் மகளை தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி தூய இருதய மேல் நிலைபள்ளியில் 8-ம் வகுப்பில் சேர்த்துவிட்டார். அவர், பள்ளி வளாகத்திலுள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கிப் படித்துவந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராகேல்மேரி என்ற சகாய மேரி, விடுதி வார்டனாக பணிபுரிந்துவருகிறார். முருகானந்தத்தின் மகள் தற்போது 12-ம் வகுப்பு படித்துவந்தார். இந்த நிலையில், வார்டன் சகாய மேரி அந்த மாணவியை கிறிஸ்துவ மதத்துக்கு மதம் மாறச் சொன்னதாகவும், அதற்கு அந்த மாணவி மறுத்துவிட்டதால் அவரைக் கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி, கடந்த 9-ம் தேதி விடுதியிலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அவருக்கு வயிற்றுவலி அதிகமாகியிருக்கிறது. அதனால், அவர் வடுகம்பாளையத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி
தற்கொலை செய்துகொண்ட மாணவி

இந்து மதத்தை சேர்ந்த அந்த மாணவியை, கிறிஸ்துவ மதத்துக்கு மாற வற்புறுத்தியதால்தான் அவர் தற்கொலைக்கு முயன்றதாக விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க-வினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவந்தனர். இது தொடர்பாக அந்த மாணவியும், `ஹாஸ்டல் வார்டன் கடந்த இரண்டு வருடங்களாகவே என்னை மதம் மாற அழுத்தம் கொடுத்துவந்தார். அதற்கு நான் மறுத்ததால், கொடுமைக்கு ஆளானேன்' என வீடியோவில் பேசியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாணவி உயிரிழந்தார். அதையடுத்து, பாஜக-வினரும் மாணவியின் உறவினர்களும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த விவகாரத்தில், `அறையைச் சுத்தம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் மாணவியால் படிக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ள முயன்றார்' என போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் மாணவியின் உறவினர்கள், ``மதம் மாறச் சொன்னதால்தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் உடலை வாங்குவோம்" என கோஷமிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கைது
கைது

இது குறித்து மாணவியின் குடும்பத்தினரிடம் விசாரித்தோம். ``அந்தப் பிள்ளை நல்லா படிக்குற பொண்ணு. பத்தாம் வகுப்பில் 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். அவரை அடிக்கடி ஹாஸ்டல் வார்டன் கிறிஸ்துவ மதத்துக்கு மாறச் சொல்லிவந்தார். ஆனால், அவர் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்திவந்தார். இதனால் கழிப்பறை உள்ளிட்டவற்றைச் சுத்தம் செய்யச் சொல்லி கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.

`எனக்கு வாழவே பிடிக்கலை. நான் சாவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன்' என மாணவி தன்னுடைய நோட்டில் எழுதிவைத்திருக்கிறார். இதற்குக் காரணம் ஹாஸ்டல் நிர்வாகம்தான். வார்டன் சகாய மேரி தன்னுடைய பணிகள் அனைத்தையும் அவரைச் செய்யவைத்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தால், நல்ல நிலைக்குப் போகலாம் எனப் படிப்பில் கவனமாக இருக்க நினைத்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி
தற்கொலை செய்துகொண்ட மாணவி

ஆனால் வார்டன், அளவுக்கு அதிகமாக வேலை வாங்கி வந்ததால் அவரால் படிக்க முடியவில்லை. மேலும், தொடர்ச்சியாக மதம் மாறவும் அழுத்தம் கொடுத்து, `மதம் மாறினால் உனக்கு எல்லா உதவியும் கிடைக்கும்... நீ படிச்சு பெரிய ஆளா வருவ' என்று கூறிவந்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றவர், இப்போது எங்களை விட்டுவிட்டு போய்விட்டார். இதற்குச் சரியான நீதி கிடைக்க வேண்டும். அதுவே எங்களுடைய விருப்பம். அப்போதுதான் மாணவியின் ஆத்மாவும் சாந்தியடையும்" என்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளித் தரப்பில் விசாரித்தோம். ``அந்த மாணவி, `என் சித்தி என்னைக் கொடுமைப்படுத்துறாங்க... அப்பாவும் என்னை கண்டுக்குறதில்ல!' எனக் கூறிக்கொண்டே இருப்பார். அதனால் மன உளைச்சலில் இருந்தார். விடுமுறை விட்டால்கூட வீட்டுக்குச் செல்லாமல் ஹாஸ்டலிலேயே இருப்பார். சிஸ்டர் சகாய மேரிக்கு 62 வயதாகிறது. தன்னுடைய சொந்தக் குழந்தைபோலவே அந்த மாணவியை கவனித்து, வளர்த்துவந்தார். அவருக்குவேண்டிய அனைத்தையும் செய்து கொடுப்பார்.

எங்கே போனாலும் கூடவே அழைச்சுக்கிட்டு போவார். கடந்த கிறிஸ்மஸ் பண்டிகையின்போதுகூட புது டிரெஸ் எடுத்துக் கொடுத்தார். பீரோ சாவியைக்கூட அந்த மாணவியிடம்தான் கொடுத்துவைத்திருப்பார். இருவரும் நல்ல புரிதலுடன் இருந்துவந்தனர். அப்பா, அம்மா பாசம் கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் அந்த மாணவிக்கு இருந்து வந்தது. `பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு எங்க போய் தங்குவேன்?’ என்று கேட்டுக்கொண்டே இருப்பாள். இந்தச் சூழலில், விஷம் குடித்திருக்கிறார். அதைக்கூட அவர் யாரிடமும் சொல்லவில்லை. வயிற்றுவலி மற்றும் வாந்தி எடுத்துக்கொண்டே இருந்ததால் பெற்றோரிடம் அனுப்பிவைத்தோம்.

பள்ளி
பள்ளி

அவர்களிடத்திலும் அவர் விஷம் குடித்ததைச் சொல்லவில்லை. உடல்நிலை முடியாமல் போனதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டாக்டர்கள்தான் விஷம் குடித்ததைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், `வார்டன் அறையைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட வேலைகளைச் செய்யச் சொன்னார். அதனால் என்னால் படிக்க முடியவில்லை' என போலீஸில் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையிலேயே வழக்கும் பதிவும் செய்யப்பட்டு, வார்டன் சகாய மேரியும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டார் என்பது தவறான தகவல். அவர் சித்தி சரண்யா உண்மைக்கு மாறாகப் பேசிவருகிறார். சுய ஆதாயத்துக்காக தவறான தகவல்களைப் பரப்பி சிலர் உள் நோக்கத்துடன் இதில் செயல்பட்டுவருகின்றனர். விசாரணையில் உண்மை தெரியவரும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism