Published:Updated:

12 வருடங்கள் தலைமறைவு! - விஷாலின் ஆன்டி-பைரசி டீமில் ஹேக்கர் பிரபாகரன்?

வண்டார்குழலி, பிரபாகரன்
பிரீமியம் ஸ்டோரி
வண்டார்குழலி, பிரபாகரன்

‘பிசினஸ் சொல்யூஷன்’ பிரபாகரன். சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் மறக்கமுடியாத பெயர் இது.

12 வருடங்கள் தலைமறைவு! - விஷாலின் ஆன்டி-பைரசி டீமில் ஹேக்கர் பிரபாகரன்?

‘பிசினஸ் சொல்யூஷன்’ பிரபாகரன். சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் மறக்கமுடியாத பெயர் இது.

Published:Updated:
வண்டார்குழலி, பிரபாகரன்
பிரீமியம் ஸ்டோரி
வண்டார்குழலி, பிரபாகரன்

டிஜிட்டல் புரட்சியின் தொடக்கக் காலமான 2000-களில் டிஜிட்டல் மோசடிக் குற்றங்களில் கோலோச்சியவர் பிரபாகரன். அந்தக் காலகட்டத்திலேயே நூறு கோடிக்கும் அதிகமான பணத்தை டிஜிட்டல் மோசடி மூலம் அள்ளிய பிரபாகரனின் மனைவி வண்டார் குழலியைதான், இப்போது கோவையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

சேலத்தைச் சேர்ந்த பிரபாகரன், பிசினஸ் சொல்யூஷன் என்ற தன் நிறுவனத்தில் டெபாசிட் செய்பவர்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் ‘டேட்டா என்ட்ரி’ வேலை வழங்கப்படும் என விளம்பரப்படுத்தினார். பலரும் ஐம்பது ஆயிரம், ஒரு லட்சம் என பணத்தைக் கட்டினார்கள். ஓரிரு வருடங்களில் டெபாசிட்தாரர்களுக்கு அள்ளிக் கொடுத்த பிரபாகரன், பிறகு பல கோடி ரூபாயுடன் தலைமறைவானார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2002, ஜனவரியில் ஈரோட்டைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர், பிரபாகரன் மோசடி செய்ததாக ஈரோடு டவுன் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். தொடர்ந்து போலீஸார் விசாரணையில் இறங்க, பல்வேறு ஊர்களிலும் பிரபாகரன் நடத்திய மோசடிகள் அம்பலமாகின. இதில் பிரபாகரன், அவரின் மனைவி வண்டார்குழலி மற்றும் ஊழியர்கள் நான்கு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

12 வருடங்கள் தலைமறைவு! - விஷாலின் ஆன்டி-பைரசி டீமில் ஹேக்கர் பிரபாகரன்?

இந்த விவகாரத்தில் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரது பெயர்கள் அடிபட்டன. தற்போது தி.மு.க-வில் எம்.பி-யாக இருக்கும் ஒருவர், அப்போது உள்ளூரில் சிறு அமைப்பு ஒன்றை நடத்திவந்தார். அந்தக் காலகட்டத்தில் அவரும் பிரபாகரனை மிரட்டி பல கோடிகளை வாங்கினார் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறகு ஜாமீனில் வெளியே வந்து வழக்கைச் சந்தித்த பிரபாகரன்-வண்டார்குழலி தம்பதி, தலைமறைவானார்கள். சி.பி.சி.ஐ.டி-க்கு வழக்கு மாற்றப்பட்டும் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இருவரையும் கண்டுபிடிக்க போலீஸாரால் இயலவில்லை. இந்த நிலையில்தான் தற்போது கோவையில் தலைமறைவாக இருந்த வண்டார்குழலியை, சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்திருக் கின்றனர்.

இந்த ஸ்கெட்சிலும் பிரபாகரன் சிக்கவில்லை. அவரைப் பற்றி அதிர்ச்சிகரமான தகவல்கள் போலீஸாருக்குக் கிடைத்துள்ளன. இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், “பிரபாகரன் தலைமறைவான காலகட்டத்தில் சென்னை, மும்பை, பெங்களூரு எனப் பல்வேறு இடங்களில் தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டு, ஏகப்பட்ட மோசடிகளைச் செய்திருக்கிறார். பி.எம்.டபிள்யூ, பென்ஸ் என விலை உயர்ந்த கார்கள், பிரமாண்டமான வில்லாக்களில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். ஹேக்கிங் செய்வதில் புலியான பிரபாகரன், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் விஷால் உருவாக்கிய ஆன்டி-பைரசி ஆன்லைன் டீமில் சிவா என்கிற பெயரில் இருந்திருக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. மனைவியை போலீஸார் நெருங்குவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, கடைசி நேரத்தில் பிரபாகரன் தப்பிவிட்டார். விரைவில் அவரையும் பிடித்துவிடுவோம்” என்றார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism