Published:Updated:

வாட்ஸ் அப்-பில் படங்கள்... ஒரு க்ளிக்கில் பேமென்ட்..! விபசாரம், c/o செல்போன்

சென்னையில் ஆன்லைன் மூலமாக விபசாரத்துக்கு கஸ்டமர் பிடிக்கும் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. சமாளிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது.

Online Prostitution
Online Prostitution

தலைநிறைய மல்லிகைப்பூ, ஜிகுஜிகு சேலை, கண்களில் கிறக்கம் வடிய ரோட்டோரத்தில் நின்று வாடிக்கையாளர்களை விபசாரத்துக்கு வளைத்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. டிஜிட்டல் மயமான உலகில், விபசாரமும் ஆன்லைன் வடிவமெடுத்து போலீஸாருக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

Online Prostitution
Online Prostitution

குறிப்பிட்ட இரண்டு இணையதளங்களில் விளம்பரம் செய்யும் விபசாரத் தரகர்கள், எந்த மாதிரியான சேவைகள் வழங்கப்படும் என்பதையும் குறிப்பிட்டு, அவற்றுக்கான ‘ரேட்’டையும் அறிவிக்கின்றனர். அவர்களின் மொபைல் எண்ணும் ‘வெரிஃபைடு’ என விளம்பரப்படுத்தப்படுகிறது.

இந்த ஆன்லைன் விளம்பரங்களில், ஏ.சி. வசதி, நட்பான சேவை என்பதில் தொடங்கி, 'எல்லாம் சுத்த பத்தமாதான் இருக்கு..' என்பதுவரை டிசைன் டிசைனாகச் சேவைகள் பந்தி வைக்கப்படுகின்றன.
Online Prostitution
Online Prostitution

அந்த எண்ணைத் தொடர்புகொண்டால், ஒரு பெண் பேசுகிறார். நமது பெயரைக் கேட்டுக்கொண்டு, எப்போது வரவேண்டும் என்பதை மட்டும் கூறுகிறார். மேற்கொண்டு கேள்வி கேட்டால், தொடர்பைத் துண்டித்துவிடுகிறார்கள்.

சென்னையில் வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், ஆயிரம் விளக்கு, மவுலிவாக்கம், போரூர், கல்லம்சாவடி, அம்பத்தூர் பகுதிகளிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஈ.சி.ஆர். சாலையிலுள்ள பங்களாக்களில் இந்த ஹைடெக் விபசாரத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

Vikatan

இந்த ஆன்லைன் விளம்பரங்களில், ஏ.சி. வசதி, நட்பான சேவை என்பதில் தொடங்கி, `எல்லாம் சுத்த பத்தமாதான் இருக்கு..' என்பதுவரை டிசைன் டிசைனாகச் சேவைகள் பந்தி வைக்கப்படுகின்றன. 600 ரூபாயில் தொடங்கி, 10 ஆயிரம் ரூபாய் வரையில் ‘சேவைகள்’ வழங்கப்படுகின்றன. இதுகுறித்து, விபசார தொழில் நுணுக்கங்களைத் தெரிந்த முன்னாள் விபசார தரகர்கள் இருவரிடம் பேசினோம்.

இப்பலாம் பேமென்ட், பணமா வாங்குறது இல்ல. ஒருவேளை போலீஸ் பிடிச்சுட்டா, இதையே ஆதாரமா கோர்ட்டுல சமர்ப்பிக்குறாங்க. அதனால, பே டிஎம், போன்பே, பிம், கூகுள் பே மூலமா பணம் செலுத்துற முறையைக் கொண்டுவந்திருக்காங்க.
Internet Prostitution
Internet Prostitution

“இப்ப வீதிக்குவீதி சி.சி.டி.வி. கேமராக்கள் வந்துடுச்சு. போலீஸ் ரோந்தும் பலப்படுத்திட்டாங்க. முன்னமாதிரி ரோட்டோரம் நின்னு, பிசினஸ் பண்ண முடியாதுங்க. இதுனாலதான், ஆன்லைன் மூலமா கஸ்டமர்ஸ வளைக்குற வேலைகள் நடைபெறுது. போன் பண்ண உடனே, பார்ட்டியோட வாட்ஸ் அப் எண்ணுக்கு, பெண்கள் போட்டோவையும் அனுப்பி, யாரெல்லாம் இப்ப ரெடியா இருக்காங்கனு லிஸ்டும் அனுப்புவாங்க. பார்ட்டி ஓகே சொன்னதும், அவரை ஓர் இடத்துக்கு வரச் சொல்லுவாங்க. அவர் தனியாத்தான் வர்றாரா, இல்ல அவரைப் பின்தொடர்ந்து போலீஸ் ஸ்பெஷல் டீம் ஏதாச்சும் வருதானு கண்காணிக்க இரண்டு பேர் அங்கே இருப்பாங்க.

பார்ட்டி க்ளீயர்னு தெரிஞ்சவுடனே, அவருக்கு போன் போட்டு இன்னோர் இடத்துக்கு வரச் சொல்லுவாங்க. அந்த இடத்துலதான் தொழில் நடக்கும். இப்பலாம் பேமென்ட் பணமா வாங்குறது இல்ல. ஒருவேளை போலீஸ் பிடிச்சுட்டா, இதையே ஓர் ஆதாரமா கோர்ட்டுல சமர்ப்பிக்குறாங்க. அதனால, பே டிஎம், போன்பே, பிம், கூகுள் பே மூலமா பணம் செலுத்துற முறையைக் கொண்டு வந்திருக்காங்க. ரூமுக்குள்ள போறதுக்கு முன்னாடி, ஜஸ்ட் உங்க மொபைல் மூலமா பேமென்ட் பண்ணிட்டா போதும்!” என்றவர்களிடம், “போலீஸுக்கு இதெல்லாம் தெரியாதா?” என்றோம்.

Internet Prostitution
Internet Prostitution
தினமும் பத்தாயிரம் ரூபாய் சம்பளம், சுத்தபத்தமான நாலு கஸ்டமர்கள், நிரந்தர வருமானம் என விளம்பரம் செய்து அப்பாவி இளைஞர்களை விபசாரத்துக்கு இழுக்கும் வேலையும் நடைபெறுகிறது.

“அவர்களுக்கும் தெரியும். காவல் துறைக்குள்ள இருக்குற சில கறுப்பு ஆடுகளோட சப்போர்ட்டோடதான் இதெல்லாம் நடைபெறுது. சில நேரத்துல கமிஷனர் ஆபீஸ்ல இருந்து ‘ஸ்பெஷல் டீம்’ ரெய்டுக்கு வருவாங்க. விபசாரத் தடுப்புப் பிரிவு போலீஸார் வருவாங்க. அவங்க வர்றதுக்கு முன்னாடியே விபசார தரகர்களுக்குத் தகவல் வந்துடும். உஷாரா எஸ்கேப் ஆகிடுவாங்க. ஒருசில நேரத்துல மாட்ட வேண்டியதிருக்கும். மூணு மாசம் ஜெயிலுக்குள்ள இருந்துட்டு வெளிய வந்து, மறுபடியும் இந்தத் தொழில பண்ணுவாங்க.

Internet Prostitution
Internet Prostitution

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் விபசாரம் செய்ய ஆண்கள் தேவை விளம்பரங்களும் கண்சிமிட்டுகின்றன. தினமும் பத்தாயிரம் ரூபாய் சம்பளம், சுத்தபத்தமான நாலு கஸ்டமர்கள், நிரந்தர வருமானம் என விளம்பரம் செய்து அப்பாவி இளைஞர்களை விபசாரத்துக்கு இழுக்கும் வேலையும் நடைபெறுகிறது.

விளம்பரத்திலுள்ள எண்ணைத் தொடர்புகொண்டால், 'முதலில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தி உறுப்பினர் ஆகுங்கள்; பின்னர் தினமும் பத்தாயிரம் ரூபாய்க்கு கஸ்டமர்ஸ் பிடித்துக் கொடுக்கிறோம்' என ஒரு பெண் பேசுகிறார். ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பிவைத்த பின்னர், அவர்களின் நம்பர் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிடுகிறது. இந்த விளம்பரத்தை உண்மை என நம்பி, தினமும் ஐந்தாயிரம் ரூபாய் தொலைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம்" என்றனர்.

Internet Prostitution
Internet Prostitution

விபசாரத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் பேசினோம். “விபசார விளம்பரங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்கியுள்ளோம். ஆனாலும், வெவ்வேறு ‘டொமைன்’ பெயர்களில், அவை மீண்டும் முளைத்து விடுகின்றன. தற்போது கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட இணையதளங்களை கூகுள் தேடலிலிருந்து நீக்குமாறு கேட்கவுள்ளோம்.

நாங்களும் ரெய்டு நடத்தி, ஆவணங்களைச் சமர்ப்பித்தாலும், மூன்று மாதத்தில் தரகர்களும், விபசார அழகிகளும் வெளியே வந்துவிடுகிறார்கள். மும்பை, கொல்கத்தாவில் பவ் பஜார், சோனாகாச்சி இருப்பது போன்று விபசாரத்துக்கு எனத் தனியாக ஓர் ஏரியாவை ஒதுக்கி, இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகளை வழங்கினால், குற்றங்கள் நிகழ்வதைத் தடுக்கலாம்!” என்றனர்.

வழக்கறிஞர் இதய அமுதன்
வழக்கறிஞர் இதய அமுதன்

வழக்கறிஞர் இதய அமுதனிடம் பேசினோம். “தமிழகத்தில் பாலியல் தொழில் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், ஆண்ட்ராய்டு சாட் மூலமாகவும், இணையதளங்கள் மூலமாகவும் பாலியல் தொழிலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு லைசென்ஸ் கொடுக்கிறார்கள். நமது கலாசாரம் இதற்கு இடம்கொடுப்பதில்லை.

அரசாங்கமும் இதை ஒரு பிரச்னையாகப் பார்ப்பதில்லை. இதனால், வீதிக்குவீதி பாலியல் தொழில் நடைபெறத்தான் செய்கிறது. முதலில் மக்களிடமும், அரசாங்கத்திடம் இப்பிரச்னை தொடர்பாகக் கருத்துகள் பரிமாறப்பட்டால்தான், அதிலிருந்து ஒரு தீர்வு கிடைக்கும். இல்லையென்றால், இதை ஒழுங்குப்படுத்துவது மிகவும் சிரமம்” என்றார்.

`` வெறும் ரெண்டாயிரம் ரூபாய்தான்! ’’ இரவுகளில் ’கூப்பிடும்’ கோயம்பேடு

என்னதான் வேகமெடுத்து காவல் துறை ஆன்லைன் விபசாரத்தைத் தடுக்க முற்பட்டாலும், புதிய புதிய வழிமுறைகளில் அந்த இணையதளங்கள் மீண்டும் முளைத்துவிடுகின்றன. அரசாங்கம் இதை ஒரு பிரச்னையாகக் கருதி திட்டம் உருவாக்காதவரை, விபசாரத்தைத் தடுப்பதும், ஒழுங்குப்படுத்துவதும் சிரமம்தான்.