Published:Updated:

திண்டுக்கல்: பட்டாகத்தியில் கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாட்டம்!- போலீஸ் ரேடாரில் 6 பேர்

பட்டாகத்தியில் கேக் வெட்டும் ரூபன்
பட்டாகத்தியில் கேக் வெட்டும் ரூபன்

பட்டாகத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவர்களைத் தேடிவருகின்றனர்.

திண்டுக்கல் - பழனி பைபாஸ் சாலையில் இருக்கிறது முருகபவனம் என்ற கிராமம். இங்கு வசிக்கும் 22 வயதான ரூபனுக்கு இரு தினங்களுக்கு முன்னர் பிறந்தநாள். இதயறிந்த அவரது நண்பர்களான அருண், ராஜபாண்டி, போஸ், விஷ்வா, பரத் ஆகிய ஐவரும், ரூபனை கேக் வெட்ட அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

ரூபன்
ரூபன்
திண்டுக்கல்: ஓடை அருகே கிடந்த 14 நாட்டுத் துப்பாக்கிகள்! -  அதிர்ச்சியில் காவல்துறை

மீனாட்சிநாயக்கன்பட்டி கோயில் முன்பாக கேக் வெட்டிய ரூபன், கேக் வாங்கும்போது கடையில் கொடுக்கப்படும் பிளாஸ்டிக் கத்தியைத் தூக்கி எறிந்துவிட்டு, பட்டாகத்தியில் கேக் வெட்டியிருக்கிறார்.

இதை, ரூபனின் நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்கள்.

ரூபன்
ரூபன்
தேனி: குமாரை `கட்’ செய்த தேனி எம்.பி! - மத்திய அமைச்சர் பதவிக்குப் பெயர் மாற்றமா?

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் இறங்கிய தாடிக்கொம்பு போலீஸார், வீடியோவிலிருக்கும் இளைஞர்கள் குறித்து விசாரித்தனர். இறுதியாக வீடியோவில் இருந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டனர்.

தாடிக்கொம்பு காவல்நிலையம்
தாடிக்கொம்பு காவல்நிலையம்
திண்டுக்கல்: திருடிக்கொண்டிருக்கும்போதே வந்த போலீஸார்! - சிக்கிய கடப்பாரைத் திருடன்

தொடர்ந்து, ரூபன், அவருடைய நண்பர்கள் உட்பட ஆறு பேர் மீது தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அவர்களை விசாரணை செய்யத் தேடியபோது அனைவரும் தலைமறைவானது தெரியவந்தது. ஆறு பேரையும் போலீஸார் தேடிவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு