Published:Updated:

திண்டுக்கல் துப்பாக்கிச்சூடு: மலைப்பகுதிகளில் போலீஸார் தீவிர ஆய்வு; 5 துப்பாக்கிகள் பறிமுதல்!

ஐந்து துப்பாக்கிகள் பறிமுதல்!
News
ஐந்து துப்பாக்கிகள் பறிமுதல்!

மலைகிராம மக்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அவர்கள்  துப்பாக்கிகள் வைத்திருந்தால் தாமாக முன்வந்து போலீஸாரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

திண்டுக்கல்லில் மீன்பிடிக் குத்தகை ஏலம் எடுத்ததில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ராகேஷ்குமார் என்ற 26 வயது இளைஞர் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நான்கு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

மலையடிவாரங்களில் வசிக்கக்கூடிய மக்கள் வனவிலங்குகளை விரட்டவும், வேட்டையாடவும் நாட்டுத்துப்பாக்கிகளை வீட்டில் வைத்தே தயாரித்து, பயன்பாட்டில் வைத்திருக்கின்றனர். இதை போலீஸார் தொடர்ச்சியாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்க முடியும் என்பதைக் குறிப்பிட்டு விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

துப்பாக்கி
துப்பாக்கி

அதனடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, காவல் உதவி கண்காணிப்பாளர் அருண் கபிலன், காவல் உதவி துணை கண்காணிப்பாளர் முருகன், இமானுவேல் ராஜ்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படை தலைமையில் எட்டு ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 125 பேர் கொண்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இவர்கள் திண்டுக்கல் ஊரக உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமலை, நத்தம், சாணார்பட்டி, தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தனிப்படை
தனிப்படை

அப்போது கல்வராயன்குளம், தவசிமடை, சாணார்பட்டி, நத்தம், வெள்ளோடு, சிறுமலை ஆகிய பகுதிகளில் நாட்டுத்துப்பாக்கிகளைப் பதுக்கிவைத்திருந்த சேவியர், மூக்கன், சின்னழகு ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்து, அவர்களிடமிருந்து இரண்டு ஏர்கன், எஸ்.பி.பி.எல் துப்பாக்கி மூன்று என மொத்தம் 5 துப்பாக்கிகள் மற்றும் கரி மருந்து ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களை சாணார்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார் அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்தனர்.

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் விசாரித்தோம். ``சிறுமலை, நத்தம், சாணார்பட்டி தாலுகா காவல் நிலைய எல்லைகளில் இருக்கும் தனி வீடுகள், மலைப்பகுதிகளில் நாட்டுத்துப்பாக்கிகள், கள்ளத்துப்பாக்கிகள் பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றனவா என சோதனை செய்தோம். அதில் இரண்டு ஏர்கன் மற்றும் மூன்று எஸ்.பி.பி.எல் என மொத்தம் ஐந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு, மூன்று குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் வருவாய்த்துறையினருடன் இணைந்து மலைக்கிராம மக்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அவர்கள் துப்பாக்கிகள் வைத்திருந்தால் தாமாக முன்வந்து போலீஸாரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதுபோல வேட்டைக்குப் பயன்படுத்தும் துப்பாக்கிகள் வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.