Published:Updated:

`ஆந்திரா டு மதுரை... பேப்பர் லாரியில் கடத்தப்பட்ட 215 கிலோ கஞ்சா!' - போலீஸில் சிக்கியது எப்படி?

கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸார்

ஆந்திராவிலிருந்து திண்டுக்கல் வழியாக மதுரைக்கு பேப்பர் லாரியில் கடத்தப்பட்ட 215 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

`ஆந்திரா டு மதுரை... பேப்பர் லாரியில் கடத்தப்பட்ட 215 கிலோ கஞ்சா!' - போலீஸில் சிக்கியது எப்படி?

ஆந்திராவிலிருந்து திண்டுக்கல் வழியாக மதுரைக்கு பேப்பர் லாரியில் கடத்தப்பட்ட 215 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Published:Updated:
கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸார்

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கஞ்சா வேட்டை 2.0 என்ற ஆபரேஷனை ஒரு மாதம் நடத்த வேண்டும் என அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

அந்தச் சுற்றறிக்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கம் அறவே இருக்கக் கூடாது என்பதை அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவ்வாறு போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார்.

கஞ்சா மூட்டைகள்
கஞ்சா மூட்டைகள்

அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான விவரங்களை போலீஸார் தீவிரமாக திரட்டி வந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து கஞ்சா மதுரை சுற்றுப் பகுதியில் விற்பனை செய்வதற்காக பேப்பர் கொண்டு செல்லும் லாரியில் மறைத்து கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் வேடசந்தூர் காக்கா தோப்பு பிரிவு பகுதியில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கஞ்சா விற்பனை
கஞ்சா விற்பனை

அப்போதுஅந்த வழியே லாரி ஒன்று வேகமாக வந்திருக்கிறது. சந்தேகமடைந்த போலீஸார் அந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரி முழுவதும் பேப்பர் பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இருந்தபோதிலும் போலீஸார் நிற்பதை கண்டதும் லாரி வேகமாக சென்றதால் சந்தேகம் கொண்ட போலீஸார் பேப்பர் பண்டல்கள் அனைத்தையும் விலக்கி பார்த்தனர். அப்போது பேப்பர் பண்டல்களுக்கு இடையே கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், லாரியில் கஞ்சா கடத்தி வந்த சங்ககிரியைச் சேர்ந்த அருண்குமார் (33), பர்கூரைச் சேர்ந்த சண்முகம் (58) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் லாரியில் கடத்தப்பட்ட 215 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.