Published:Updated:

கஞ்சா வியாபாரத்தில் தகராறு; தடைசெய்யப்பட்ட அருவியில் கொலைசெய்து வீசப்பட்ட இளைஞர்! - நடந்தது என்ன?

கொலை

கஞ்சா வியாபாரம் தொடர்பான தகராறில் இளைஞர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கஞ்சா வியாபாரத்தில் தகராறு; தடைசெய்யப்பட்ட அருவியில் கொலைசெய்து வீசப்பட்ட இளைஞர்! - நடந்தது என்ன?

கஞ்சா வியாபாரம் தொடர்பான தகராறில் இளைஞர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலை

திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி அருகே புல்லாவெளி அருவி உள்ளது. வனத்துறைக்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதியான இங்கு இளைஞர்கள் வந்து குளிப்பதை வழங்கமாகக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம்கூட பரமக்குடியைச் சேர்ந்த அஜய்பாண்டி என்ற இளைஞர் போட்டோ ​ஷூட் எடுத்தபோது அருவியில் ஆயிரம் அடி பள்ளத்தாக்கில் தவறிவிழந்து உயிரிழந்தார். இதேபோல இந்தப் பகுதியில் 10 இளைஞர்கள் உயிரிழந்தால், வனத்துறை அருவி பகுதிக்கு வரவே தடைவிதித்திருக்கிறது.

ரத்தினகுமார்
ரத்தினகுமார்

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், அய்யங்கோட்டையைச் சேர்ந்த ரத்தினகுமார் என்ற இளைஞர் கொலைசெய்யப்பட்டு அருவியில் தூக்கிவீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீஸாரிடம் விசாரித்தோம். ``அய்யங்கோட்டையைச் சேர்ந்தவர் விக்னேஷ். கஞ்சா பழக்கம் கொண்ட இவர், கஞ்சா வியாபாரத்திலும் ஈடுபட்டுவந்துள்ளார். மேலும் இவர்மீது அடி தடி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கஞ்சா வியாபாரத்திற்கு இவருடை உறவினர்களான நாதன், அபிகுமார், ரத்தினகுமார், பிரேம்குமார், இளங்கோவன்  உள்ளிட்டோரைப் பயன்படுத்தி வந்துள்ளார். 

புல்லாவெளி அருவி
புல்லாவெளி அருவி

இந்த நிலையில், தன்னுடன் சிறையில் பழக்கமான தேனி மாவட்டம், தேவதானபட்டியைச் சேர்ந்த ஜெகன் என்பவருடன் கஞ்சா வியாபாரத்தில் டீலிங் வைத்திருக்கிறார். இதில் ஜெகனிடம் வாங்கிய கஞ்சாவை விற்றுவிட்டு அதற்கான தொகையை அவரிடம் கொடுக்காமல் வைத்துக்கொண்டு கஞ்சா இன்னும் விற்கவில்லை எனக் கூறி ஏமாற்றி வந்துள்ளார். இந்தத் தகவலை விக்னேஷ் உடனிருக்கும் ரத்தினகுமார், ஜெகனிடம் கூறிவிட்டார். இதையடுத்து ஜெகன், விக்னேஷை பிடித்து தகராறு செய்து தனது பணத்தை வாங்கிச் சென்றுள்ளார். ரத்தினகுமார் தன்னை காட்டிக்கொடுத்துவிட்டார் என்ற ஆத்திரத்தில் இருந்த விக்னேஷ் தரப்பினர், இவன் ஜெகனிடம் தங்களை காட்டிக்கொடுத்தது போல, போலீஸாரிடமும் காட்டிக் கொடுத்துவிடுவான். எனவே அவனை கொலைசெய்துவிட வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.

இதையடுத்து ரத்தினகுமாரை அருவி பகுதிக்குச் சென்று குடிக்கலாம் எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர். இரண்டு டூவிலர்களில் 7 பேர் சென்று ரத்தினகுமாருக்கு அதிகமாக மது ஊற்றிக் கொடுத்து நன்றாக போதை ஏறியவுடன் அவரின் தலையில் கல்லைப் போட்டு கொன்றுவிட்டு, அருவியின் பள்ளதாக்கில் தூக்கிவீசிவிட்டு சென்றுவிட்டனர்.

கஞ்சா
கஞ்சா

ரத்தினகுமாரை காணவில்லை எல்லோரும் தேடி கொண்டிருக்க, விக்னேஷூடன் சேர்ந்து கொலைசெய்தவர்கள் மதுபோதையில் தங்கள் உறவினர்களிடம் கொலைசெய்த விஷயத்தை உளறிவிட்டனர். இதையடுத்து கிடைத்த தகவலின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த விக்னேஷ், அபிகுமார், நாதன் ஆகியோரை கைதுசெய்துள்ளோம். தப்பிய பிரேம்குமார், இளங்கோவன் மற்றும் 16 வயது சிறுவனைத் தேடி வருகிறோம். பள்ளத்தாக்கில் வீசப்பட்ட ரத்தினகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம்" என்றனர்.