Published:Updated:

சென்னை: தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை?! - போலீஸார் விசாரணை

தமிழன் பிரசன்னா
தமிழன் பிரசன்னா

சென்னை தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் தமிழன் பிரசன்னா. வழக்கறிஞரான இவர் தி.மு.க-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளராக இருக்கிறார். இவரின் மனைவி நதியா (35). இவருக்கு இன்று பிறந்தநாள். இந்தநிலையில் பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாடுவதில் தமிழன் பிரசன்னாவுக்கும் அவரின் மனைவி நதியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால் மனவேதனையடைந்த நதியா, வீட்டில் இன்று முற்பகலில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

 தற்கொலை
தற்கொலை
Representational Image

இது குறித்துத் தகவலறிந்த கொடுங்கையூர் போலீஸார், நதியாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நதியாவின் தற்கொலை தொடர்பாக தமிழன் பிரசன்னாவிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு