Published:Updated:

'8 மாத சிசுவைக் கலைக்க நினைத்ததால் விபரீதம்' - திமுக பிரமுகரின் மகன் உட்பட 8 பேர் கைது!

அரியலூர் கலெக்டர் ஆபீஸ்
அரியலூர் கலெக்டர் ஆபீஸ்

கடலூர் மாவட்டம், கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். தி.மு.க-வைச் சேர்ந்த இவர், கொத்தட்டை ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார்.

``எங்க அப்பா கட்சியில பெரிய ஆளா இருக்காங்க. அவங்களுக்கு தெரிஞ்சா பிரச்னையாகிவிடும். குழந்தையை முதலில் கலைத்துவிடுவோம். அதன் பிறகு நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்" என்று தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் வாக்குறுதி கொடுத்ததோடு, எட்டு மாத கர்ப்பமாக இருந்த இளம்பெண்ணுக்கு வீட்டிலேயே கருக்கலைப்பு செய்ததால் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். யாருக்கும் தெரியாமல் எட்டு மாத சிசுவை முந்திரிக்காட்டில் புதைத்த சம்பவம் மனதை உறையவைத்திருக்கிறது.

கொலை
கொலை
representational image

கடலூர் மாவட்டம், கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். தி.மு.க-வைச் சேர்ந்த இவர், கொத்தட்டை ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். இவரின் மகன் வசந்தகுமார் என்பவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வசந்தகுமாரின் எதிர் வீட்டில் வசித்துவருபவர் காமாட்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தாயார் இறந்துவிட்ட நிலையில் அவருடைய தாய் மாமா இளையராஜா பராமரிப்பில் வாழ்ந்துவருகிறார். வசந்தகுமார், காமாட்சி இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதில் காமாட்சி கர்ப்பமடைந்தார். இந்த விவகாரம் வீட்டுக்குத் தெரியவில்லை.

காமாட்சியின் மாமன் இளையராஜா திருமண ஏற்பாடுகள் செய்திருக்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காமாட்சி வீட்டைவிட்டு வெளியே சென்று தனியாக வாழ்ந்துவந்திருக்கிறார். காமாட்சி, வசந்தகுமாரிடம், "எங்க மாமா எனக்குத் திருமண ஏற்பாடுகள் செய்துவருகிறார்" என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அவர், "எங்க அப்பா கட்சியில பெரிய ஆளா இருக்காங்க. அவங்களுக்கு தெரிந்தால் பிரச்னையாகிவிடும். கருவை முதலில் கலைத்துவிடுவோம்.

வசந்தகுமார்
வசந்தகுமார்

அதன் பிறகு நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்" என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அந்தப் பெண்ணும் கருவைக் கலைக்க முடிவு செய்து இருவரும் விருத்தாசலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்குள்ள செவிலியர்கள் அரியலூர் மாவட்டம், ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவரின் தொடர்பு எண்ணைக் கொடுத்திருக்கிறார்கள். அவரிடம் பேசி 20,000 ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டு அரியலூரிலுள்ள கிருஷ்ணவேணியின் அண்ணன் வீட்டில் வைத்து காமாட்சிக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். அப்போது, வசந்தகுமாரும் அருகில் இருந்திருக்கிறார்.

சிறிது நேரத்தில் ரத்தப்போக்கு அதிகமாகி காமாட்சி உடல்நிலை மோசமானது. இரவில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட காமாட்சியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். காமாட்சியின் இறப்புக்குக் காரணமான வசந்தகுமார் உட்பட இதில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்ய வலியுறுத்தி அந்தப் பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் புகார்படி ஆண்டிமடம் போலீஸார் விசாரித்து இதில் சம்பந்தப்பட்ட எட்டு பேரையும் கைதுசெய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். நீதிபதி சுப்ரமணியன் வழக்கை விசாரித்து கைதான எட்டு பேரையும் 15 நாள்கள் சிறையிலடைக்க உத்தரவிட்டிருக்கிறார்.

 மரணம்
மரணம்

வழக்கை விசாரித்துவந்த போலீஸாரிடம் பேசினோம். ``காமாட்சி எட்டு மாத கர்ப்பமாக இருந்திருக்கிறார். கருக்கலைப்பு செய்ய முயன்றதே முதல் தவறு. யாருக்கும் தெரியாமல் எட்டு மாத சிசுவை முந்திரிக்காட்டில் புதைத்திருப்பதாக அவர்களே ஒத்துக்கொண்டனர்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு