Published:Updated:

சர்வீஸுக்கு விட்ட புல்லட் மாயம்; பதிலுக்கு 2 புல்லட்டை வலுக்கட்டாயமாகத் தூக்கிய திமுக பிரமுகர்!

சர்வீஸுக்கு விட்ட புல்லட் மாயம்

அருப்புக்கோட்டையில் ஷோரூமில் சர்வீஸுக்கு விட்டிருந்த தி.மு.க பிரமுகரின் டூ வீலர் மாயமானது. இதையடுத்து ஆத்திரமடைந்த அவர், அத்துமீறி ஷோரூமிலிருந்து இரண்டு புதிய டூ வீலர்களை வீட்டுக்கு ஓட்டிச் சென்றார்.

சர்வீஸுக்கு விட்ட புல்லட் மாயம்; பதிலுக்கு 2 புல்லட்டை வலுக்கட்டாயமாகத் தூக்கிய திமுக பிரமுகர்!

அருப்புக்கோட்டையில் ஷோரூமில் சர்வீஸுக்கு விட்டிருந்த தி.மு.க பிரமுகரின் டூ வீலர் மாயமானது. இதையடுத்து ஆத்திரமடைந்த அவர், அத்துமீறி ஷோரூமிலிருந்து இரண்டு புதிய டூ வீலர்களை வீட்டுக்கு ஓட்டிச் சென்றார்.

Published:Updated:
சர்வீஸுக்கு விட்ட புல்லட் மாயம்

அருப்புக்கோட்டை அருகேயுள்ள ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவர் சோலை. இவர் மாவட்ட தி.மு.க தொண்டரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இவருடைய மகன் சந்தோஷ் கிருஷ்ணனுக்குச் சொந்தமான ராயல் என்ஃபீல்டு கிளாசிக் டூ வீலரை கடந்த கடந்த 15-ம் தேதி அருப்புக்கோட்டை காந்திநகரில் உள்ள ராயல் என்ஃபீல்டு ஷோரூமில் சர்வீஸ் செய்வதற்காக விட்டிருக்கிறார். சர்வீஸ் முடிந்து டூ வீலரை டெலிவரி கொடுப்பதற்காக தி.மு.க பிரமுகர் சோலையின் டூ வீலரை, ஷோரூம் வாசலில் பணியாளர்கள் நிறுத்திவைத்திருந்தனர்.

ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு
கோப்புப் படம்

அப்போது அந்த வழியே வந்த மர்ம நபர் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில், தி.மு.க பிரமுகர் சோலையின் டூ வீலரை திருடிக்கொண்டு சென்றிருக்கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஷோரூம் பணியாளர்கள்‌, டூ வீலரைத் திருடிய மர்ம நபரை விரட்டிச்சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார்.

தொடர்ந்து, திருடிய டூ வீலருடன் பெட்ரோல் பங்க்குக்குச் சென்ற மர்ம நபர் டேங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, பணம் தராமல் அதே டூ வீலரில் அங்கிருந்து தப்பிச்சென்றதாகத் தெரிகிறது. இது குறித்த சிசிடிவி காட்சிகளைக்கொண்டு டூ வீலர் ஷோரூம் மேலாளர் ஆனந்த பாண்டியராஜன் என்பவர் அருப்புக்கோட்டை நகர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சிசிடிவி.காட்சி
சிசிடிவி.காட்சி

இதற்கிடையில் டூ வீலர் திருட்டுப்போன தகவலறிந்து ஷோரூமூக்கு வந்த தி.மு.க பிரமுகர் சோலை, காணாமல்போன தன்னுடைய டூ வீலரை இரண்டு நாள்களில் கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும் என ஷோரூம் பணியாளர்களுக்குக் கெடு விதித்துச் சென்றதாகத் தெரிகிறது. அவர் சொன்னதுபோலவே, இரண்டு நாள்கள் கழிந்த நிலையில் டூ வீலர் ஷோரூமை நேற்று செல்போனில் தொடர்புகொண்டு பேசிய சோலை, மேலாளர் ஆனந்தபாண்டியராஜனைக் கடுமையான வார்த்தைகளால் திட்டித்தீர்த்திருக்கிறார். மேலும், காணாமல்போன தனது டூ வீலர் உடனடியாக கிடைக்கவில்லையென்றால், ஆட்களுடன் வந்து ஷோரூமை அடித்து நொறுக்கிவிடுவேன் என்றும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்த, ஷோரூம் மேலாளர் ஆனந்த பாண்டியராஜன், ``இரண்டு நிமிடங்கள் அவகாசம் கொடுங்கள் சார். ஓனர்கிட்ட பேசிட்டு மாற்று ஏற்பாடு செய்கிறேன்" எனக் கூறியிருக்கிறார். ஆனால், அதை ஏற்க மறுத்த சோலை, ``காணாமல்போன என்னுடைய டூ வீலருக்கு பதிலா ஷோரூமிலிருந்து ரெண்டு புதிய டூ வீலர்களை ஆட்களுடன்வந்து எடுத்துட்டுப் போறேன். என்னுடைய டூ வீலரை கண்டுபிடிச்சு தந்துட்டு உன்னோட புதிய டூ வீலர்களை வாங்கிட்டுப்போ. இது தொடர்பாக நீ எங்கே வேணாலும் புகார் குடுத்துக்க. காவல் ஆய்வாளர் முதல் எல்லாரும் எனக்கு வேண்டியவங்கதான். மற்றதையெல்லாம் நான் பார்த்துக்குறேன்" எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

சிசிடிவி.காட்சி
சிசிடிவி.காட்சி

அதைத் தொடர்ந்து, ஷோரூமூக்கு தன்னுடைய ஆட்களுடன் வந்த தி.மு.க பிரமுகர் சோலை, அத்துமீறி ஷோரூமிலிருந்து இரண்டு புதிய ராயல் என்ஃபீல்டு வாகனங்களை அங்கிருந்து வீட்டுக்கு ஓட்டிச் சென்றிருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பான போன் உரையாடல்கள், சிசிடிவி கேமரா காட்சிகளைக்கொண்டு ஷோரூம் பணியாளர்கள் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார்‌ அளித்திருக்கின்றனர்.

ஆனால், புகாரில் சம்பந்தப்பட்டவர் தி.மு.க பிரமுகர் என்பதாலும், சோலையின் உறவினர் மாவட்ட கவுன்சிலராக இருப்பதாலும், இந்தப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்வோம் என ஷோரூம் பணியாளர்களுக்கு உறுதியளித்து அங்கிருந்து அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது.