Published:Updated:

அடையாற்றில் தலை; காசிமேட்டில் வீசப்பட்ட குடல்... சென்னையை அதிரவைத்த திமுக பிரமுகர் படுகொலை!

திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை

தி.மு.க பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீஸார் கொலையாளிகளை கைது செய்திருக்கின்றனர்.

அடையாற்றில் தலை; காசிமேட்டில் வீசப்பட்ட குடல்... சென்னையை அதிரவைத்த திமுக பிரமுகர் படுகொலை!

தி.மு.க பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீஸார் கொலையாளிகளை கைது செய்திருக்கின்றனர்.

Published:Updated:
திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை

சென்னை திருவொற்றியூர் செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 65 வயதான சக்கரபாணி. இவர் திருவொற்றியூர் 7-வது வார்டு தி.மு.க உறுப்பினராக இருந்து வந்தார். மேலும், அந்தப் பகுதியில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்துவந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற சக்கரபாணி நீண்ட நேரம் ஆகியும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை. இதனால் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மணலி பகுதி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

சக்கரபாணி
சக்கரபாணி

இந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு சக்கரபாணியைத் தேடும் பணி தொடங்கியது. அந்தப் பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சி பதிவுகள், அவரின் செல்போன் சிக்னல் கொண்டு தேடும்போது போலீஸாருக்கு சில தகவல்கள் கிடைத்தன. அதை வைத்து, ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் வசித்துவரும் தமீம்பானு என்பவரின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டின் குளியலறையில் சக்கரபாணி துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிக்கிய கொலையாளிகள்:

இதனைத் தொடர்ந்து, சக்கரபாணியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தமீம்பானு மற்றும் அவரின் தம்பி வாசிம் பாஷா இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்களுடன் கொலைக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் டெல்லி பாபுவும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கொலையாளிகள்
கொலையாளிகள்

தமீம்பானு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மணலியில் சக்கரபாணியின் வீட்டில்தான் வாடகைக்குக் குடியிருந்திருக்கிறார். அவரின் கணவர் அஸ்லாம் தி.நகரின் உள்ள ஒரு கடையில் தங்கி வேலைபார்த்ததால் வாரம் ஒருமுறை மட்டும் வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். குடும்பச் சூழல் காரணமாக தமீம்பானு, சக்கரபாணியிடம் வட்டிக்குப் பணம் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு அடிக்கடி ஒன்றாக இருந்து வந்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலியல் தொல்லை:

இந்த நிலையில்தான், சக்கரபாணிக்குத் தெரியாமல் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக தமீம்பானு மணலியிருந்து ராயபுரம் பகுதிக்குக் குடியேறியிருக்கிறார். சமீபத்தில் தமீம்பானு ராயபுரத்தில் வசிக்கும் தகவல் சக்கரபாணிக்குத் தெரியவந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, முன்பு வட்டிக்குக் கொடுத்த பணத்தைக் கேட்பது போல அடிக்கடி வீட்டுக்குச் சென்று தமீம்பானுவை வற்புறுத்தி தனிமையில் இருந்திருக்கிறார். இப்படி அடிக்கடி சக்கரபாணி வீட்டுக்கு வந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்தது தமீம்பானுவுக்கு பிடிக்கவில்லை.

போலீஸார் விசாரணை
போலீஸார் விசாரணை

அதேசமயத்தில், தமீம்பானு ராயபுரம் பகுதிக்கு மாறியபோது, அவரின் கீழ் வீட்டில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் டில்லிபாபு என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தமீம்பானுவின் தம்பி வாசிம் பாஷாவும் அதே கட்டடத்தில்தான் குடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான், சக்கரபாணி கடந்த 10-ம் தேதி இரவு தமீம்பானுவின் வீட்டுக்குக் குடிபோதையில் வந்திருக்கிறார். அவரின் இரண்டு மகள்களும் வீட்டில் இருக்கும்போது உள்ளே வந்தவர், தமீம்பானுவை வலுக்கட்டாயமாக உறவுக்கு அழைத்திருக்கிறார்.

வெட்டிக் கொலை:

வெளியில் செல்லச் சொல்லியும் செல்லாத நிலையில், இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சத்தம் கேட்டு கீழ் வீட்டில் வசிக்கும் வாசிம் பாஷா அங்கு வந்திருக்கிறார். நடந்த விவரத்தைத் தனது தம்பியிடம் தமீம்பானு சொல்லிக் கதறியிருக்கிறார். அடிக்கடி தொல்லை செய்துவரும் சக்கரபாணியை ஒரேயடியாகத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று இருவரும் முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வீட்டிலிருந்த கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு சக்கரபாணியை இருவரும் வெட்டிப் படுகொலை செய்திருக்கிறார்கள்.

சம்பவம் நடந்த பகுதி
சம்பவம் நடந்த பகுதி

மேலும், சக்கரபாணியின் தலையை மட்டும் தனியாக வெட்டி எடுத்துள்ளனர். துர்நாற்றம் வீசக்கூடாது என்பதற்காக அவரின் உடலிலிருந்து குடலை மட்டும் தனியாக எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக் கட்டியுள்ளனர். பின்னர், வாசிம் பாஷா மற்றும் டில்லிபாபு இருவரும் ஆட்டோவில் சென்று குடலை காசிமேட்டில் படகுகள் நிற்கும் பகுதியில் வீசியுள்ளனர். சக்கரபாணியின் தலையை அடையாறு ஆற்றில் கல்லைக்கட்டி வீசியிருக்கின்றனர்.

கைது செய்த காவல்துறை:

வீடு திரும்பியவர்கள் பெரிய கத்தியைக் கொண்டு சக்கரபாணியின் உடலைத் தனித் தனி துண்டுகளாக வெட்டி, பிளாஸ்டிக் பையில் போட்டு ஒரு சாக்கு மூட்டையில் மொத்தமாகக் கட்டிவைத்திருக்கிறார்கள். வீட்டில் துர்நாற்றம் எதுவும் வெளியில் வந்துவிடக்கூடாது என்பதற்காக வீடு முழுவதும் வாசனைத் திரவியங்களைத் தெளித்துள்ளனர். இதனிடையே சக்கரபாணியை போலீஸார் தேடிவந்ததால், மற்ற உடற்பாகங்களை அப்புறப்படுத்தமுடியாது வீட்டிலேயே வைத்துப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். இந்தநிலையில் தான், காவல்துறையினர் கொலையாளிகளைக் கைது செய்தனர்.

தலையை தேடும் பணி
தலையை தேடும் பணி

இந்த வழக்கில் ஆற்றில் வீசப்பட்ட தலை முக்கியம் என்பதினால் கடந்த இரண்டு நாள்களாகத் தீயணைப்பு படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கொலையாளிகளான தமீம்பானு, வாசிம் பாஷா, டில்லிபாபு மூவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தி.மு.க பிரமுகர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism