Published:Updated:

``மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள்; அண்ணாமலைக்கு பயப்படத் தேவையில்லை!'' - அமைச்சர் கே.என்.நேரு

கே.என் நேரு
கே.என் நேரு

மீண்டும் அண்ணாமலையைப் பற்றி பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அவரைவிட்டுத்தள்ளுங்கள். வேறு எதாவது கேளுங்கள்" என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"அண்ணாமலைக்கு எல்லாம் பயப்படத் தேவை இல்லை. அவர் புதிதாக பா.ஜ.க-வில் தலைவராகி இருக்கிறார். அவர் மக்களிடம் பெயர் வாங்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்று பேசுகிறார். இதற்கெல்லாம் தி.மு.க ஒருபோதும் பயப்படாது" என்று காட்டமாகப் பேசினார் கே.என் நேரு.

கே.என் நேரு
கே.என் நேரு

திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் ஆதார மேம்பாட்டுத் திட்டத்தில் தரைமட்டத் தொட்டி கட்டுதல், பெரியார் நகர், கம்பரசம் பேட்டை நீர் சேகரிப்பு கிணற்றில் புதிதாக நீர் சுற்று வட்ட குழாய்கள் அமைத்தல், மோட்டார் பம்புசெட் டீசல் ஜெனரேட்டர் சமநிலை நீர்த்தேக்கத் தொட்டி, நீர் பரிசோதனை ஆய்வகம் மற்றும் நடை பாலம் அமைக்கும் பணி என 28 கோடியே 42 லட்சம் மதிப்பிலான பணிகளைத் திருச்சி உறையூர் காவல் நிலையம் அருகே குடிநீர்த் தொட்டி வளாகத்தில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே.என்.நேருவிடம், "பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தலைவர் அண்ணாமலை பாரதிய ஜனதா-வுக்கு இடையூறு ஏற்படுமானால் தி.மு.க.-வின் பிசினஸில் கை வைப்போம்" எனச் சொல்லியிருக்கிறாரே என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு, தி.மு.க எதிர்ப்பை சமாளிக்கும் வலுவான கட்சி. நாங்கள் சந்திக்காத எதிர்ப்பா? எமர்ஜென்சியையே எதிர்த்த இயக்கம் இது.

கே.என் நேரு
கே.என் நேரு
கொம்பு சீவும் நேரு முதல் கலெக்டரைக் காக்கவைத்த  துரைமுருகன் வரை! - கழுகார் அப்டேட்ஸ்!

நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள். அண்ணாமலைக்கு எல்லாம் பயப்படத் தேவை இல்லை. அண்ணாமலை புதிதாக பா.ஜ.க-வின் தலைவராகி இருக்கிறார். அவர் மக்களிடம் பெயர் வாங்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்று பேசுகிறார். இதற்கெல்லாம் தி.மு.க பயப்படாது.

கே.என் நேரு
கே.என் நேரு

அண்ணாமலையைப் போலப் பலரைப் பார்த்திருக்கிறோம்" என்றார். மீண்டும் அண்ணாமலையைப் பற்றி பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அவரைவிட்டுத்தள்ளுங்கள். வேறு எதாவது கேளுங்கள்" என்று தனக்கே உண்டான பாணியில் கிண்டல் அடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு