Published:Updated:

திமுக ஊராட்சி துணைத் தலைவரின் வாகனம் தீ வைத்து எரிப்பு! - நடந்தது என்ன?

வாகனம் தீ வைத்து எரிப்பு

ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஊராட்சி துணைத் தலைவரின் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக ஊராட்சி துணைத் தலைவரின் வாகனம் தீ வைத்து எரிப்பு! - நடந்தது என்ன?

ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஊராட்சி துணைத் தலைவரின் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
வாகனம் தீ வைத்து எரிப்பு

நீலகிரி மாவட்டம், மேலூர் ஊராட்சியின் துணைத் தலைவராக திமுக-வைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் பதவி வகித்துவருகிறார். வழக்கமான பணிகளை முடித்துவிட்டு நேற்று தனது வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றிருக்கிறார். நிறுத்திச் சென்ற வாகனம் எரிந்து கிடப்பதாக இன்று காலை நாராஜுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. நேரில் சென்று பார்த்தபோது முழு வாகனமும் தீக்கிரையாகியிருந்தது. உடனடியாக கொலக்கம்பை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்து புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வாகனம் தீ வைத்து எரிப்பு
வாகனம் தீ வைத்து எரிப்பு

இது குறித்து நம்மிடம் பேசிய துணைத் தலைவர் நாகராஜ், "வழக்கமா வண்டியை வீட்டுப்பக்கம் நிறுத்துவேன். நேற்று வேறு இடத்துல நிறுத்திட்டேன். இதை நோட்டம்விட்ட யாரோ தீ வெச்சு எரிச்சிட்டாங்க" என்றார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய காவல்துறையினர், "அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தோம். மக்கள் நடமாட்டம் இல்லாத அதிகாலை 2:30 மணியளவில் தீ வைத்து கொளுத்தியிருக்கிறார்கள். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்லது எதிரிகளின் தூண்டுதலால் இது நடந்திருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.