Published:Updated:

சிகிச்சைக்கு வந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: 70 வயது மருத்துவர் கைது!

தனியார் மருத்துவமனை

ராமநாதபுரத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.

சிகிச்சைக்கு வந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: 70 வயது மருத்துவர் கைது!

ராமநாதபுரத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.

Published:Updated:
தனியார் மருத்துவமனை

ராமநாதபுரத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவிக்கு, உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் ராமநாதபுரம் பாரதி நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

சிகிச்சைக்குச் சென்ற அந்த இளம்பெண்ணுக்கு மருத்துவர் ஜபருல்லா கான் (70) சிகிச்சை அளித்துள்ளார். அப்போது மாணவியின் நோய்க்கு சிகிச்சை அளிக்காமல், பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து அவர் தன் பெற்றோரிடம் கூறவே அதிர்ச்சி அடைந்த அவர்கள், மருத்துவர் மீது ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் மருத்துவர் ஜபருல்லா கானிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து பாலியல் தொல்லை செய்தது தொடர்பான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், மருத்துவர் ஜபருல்லா கானை கைது செய்து ராமநாதபுரம் கிளைச்சிறையில் அடைத்தனர்.

ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்
ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்

சிகிச்சைக்கு வந்த கல்லூரி மாணவிக்கு மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், ராமநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.