Published:Updated:

கிளினிக்கை திறப்பதில் தாமதம்; மருத்துவருக்கு அடி, உதை... CCTV-யில் பதிவான காட்சிகள்!

மருத்துவரைத் தாக்கிய நபர்கள் ( ட்விட்டர் )

மருத்துவர் சரியான நேரத்தில் கிளினிக்கைத் திறக்காததால் நோயாளியுடன் வந்தவர்கள் அவரை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிராவின் பாராமதியிலுள்ள சங்கவி என்ற பகுதியில் யுவராஜ் கெய்க்வாட் என்பவர் தனது வீட்டுக்கு அருகில் கிளினிக் ஒன்றை நடத்திவருகிறார். மருத்துவர் யுவராஜ் தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து வீட்டில் உணவருந்திக்கொண்டிருந்தார். அப்போது வெளியிலிருந்து வந்த சிலர், கதவை வேகமாகத் தட்டியுள்ளனர். மருத்துவர் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து வெளியே வந்து பார்த்திருக்கிறார்.

கிளினிக்கைத் திறப்பதற்கு தாமதமானதால் நோயாளியுடன் வந்தவர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மருத்துவரின் வீட்டுக் கண்ணாடி ஜன்னலை முதலில் தாறுமாறாக உடைத்திருக்கிறார்கள்.

அதன் பின்னர் கதவை உடைத்து உள்ளே வர முயன்றிருக்கிறார்கள். அப்போது யுவராஜும், அவருடைய மகனும் கதவைத் திறக்க வந்தனர். அப்போது அவர்கள் இருவரையும் அங்கிருந்த கும்பல் கடுமையாகத் தாக்கியது. இந்தச் சம்பவம் செப்டம்பர் 6-ம் தேதி நடந்தது. இது தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கின்றான.

இதனையடுத்து இது குறித்து போலீஸுக்குப் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மாலேகான் காவல்துறையினர் ஆனந்த் என்கிற அனில் ஜக்தாப், விஸ்வஜீத் ஜக்தாப், அசோக் ஜக்தாப், பூஷண் ஜக்தாப் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வேகமாகப் பரப்பப்பட்டுவருகிறது.