Published:Updated:

சென்னை: ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த டாக்டர் தற்கொலை! - போலீஸ் விசாரணை

தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த டாக்டர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த டாக்டர் தற்கொலை! - போலீஸ் விசாரணை

ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த டாக்டர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published:Updated:
தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

சென்னை விருகம்பாக்கம், மேற்கு நடேசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் டெல்லியில் பணியாற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்குச் சொந்தமான வீடு இருக்கிறது. அதில் மதுசூதன ரெட்டி(69) என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர், டாக்டராக பணியாற்றி வந்திருக்கிறார். தற்போது, தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்திருக்கிறார். இவரின் மனைவி பத்மாவதி. மகள் பூர்ணிமா. இந்த நிலையில் இன்று (24.8.2022) காலை வீட்டின் பால்கனியில் மதுசூதனரெட்டி நடந்துகொண்டிருந்தார். அதிகாலை நேரம் என்பதால் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லை.

தற்கொலை
தற்கொலை

இந்தச் சூழலில் திடீரென சத்தம் கேட்டிருக்கிறது. அதைக் கேட்டு காவலாளிகள் அங்கு ஓடி வந்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் மதுசூதன ரெட்டி கீழே கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மதுசூதன ரெட்டி உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மதுசூதன ரெட்டியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுசூதன ரெட்டி மரணம் குறித்து வீட்டிலிருந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப பிரச்னையே அவர் இந்த விபரீத முடிவை எடுத்தற்கு காரணம் எனத் தெரியவந்தது. மதுசூதன ரெட்டியின் அறையை போலீஸார் ஆய்வு செய்தபோது கடிதம் ஒன்று சிக்கியது. அதை போலீஸார் கைப்பற்றி அதனடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு டாக்டர் மதுசூதன ரெட்டி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், `கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய மகளுக்கு திருமணம் நடந்தது. ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்த மகள், என் வீட்டில் இருந்து வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் இந்த முடிவை எடுக்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்."