Published:Updated:

சிவகாசி: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கிடந்த நாய் சடலம்; பொதுமக்கள் அதிர்ச்சி - போலீஸ் விசாரணை

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நாய் உடல்
News
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நாய் உடல்

சிவகாசி அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இறந்த நாயின் உடல் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டை ஊராட்சியில், பிள்ளையார் கோயில் தெருவில் 60,000 லிட்டர் கொள்ளளவுகொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருக்கிறது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக நேற்று முன்தினம் குடிநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில், தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக இன்று பணியாளர்கள் சென்றபோது, தொட்டிக்குள் இறந்தநிலையில் நாயின் உடல் கிடந்திருக்கிறது.

இது குறித்து ஊராட்சி மன்றத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஊராட்சி மன்றத் தலைவர் காளீஸ்வரி எம்.புதுப்பட்டி போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், சிவகாசி சரக காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நாய் உடல்
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நாய் உடல்

தொடர்ந்து, நீர்த்தேக்கத் தொட்டிக்குள் கிடந்த இறந்த நாயின் உடல் மீட்கப்பட்டு, கூறாய்வு பரிசோதனைக்காக கால்நடைத்துறை மருத்துவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவரின் புகாரைத் தொடர்ந்து எம்.புதுப்பட்டி போலீஸார் வழக்கு பதிவுசெய்து இறந்த நாயின் உடலை குடிநீர் தொட்டிக்குள் போட்டது யார்... என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் ஊரில் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தைப்போல, விருதுநகர் மாவட்டம், புதுக்கோட்டை ஊரிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இறந்த நாயின் உடல் கண்டெடுக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.