Published:Updated:

8 மாத குழந்தைக் கருவை வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்த நாய்! - மருத்துவமனையில் பரபரப்பு

நாய் ( சித்திரிப்புப் படம் )

ராஜஸ்தானில் நாய் ஒன்று இறந்துபோன 8 மாதக் குழந்தையின் கருவை வாயில் வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

8 மாத குழந்தைக் கருவை வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்த நாய்! - மருத்துவமனையில் பரபரப்பு

ராஜஸ்தானில் நாய் ஒன்று இறந்துபோன 8 மாதக் குழந்தையின் கருவை வாயில் வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
நாய் ( சித்திரிப்புப் படம் )

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரின், சங்கனேரியில் அரசு பெண்கள் மருத்துவமனை இருக்கிறது. இந்த மருத்துவமனையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, நாய் ஒன்று இறந்துபோன 8 மாதக் குழந்தைக் கருவை வாயில் வைத்துக்கொண்டு சுற்றித் திரிந்திருக்கிறது. மக்கள் நாயைப் பிடிக்க முயன்றபோது, ​​கருவை அங்கிருந்த கட்டடத்தின் அருகே போட்டுவிட்டு மருத்துவமனை சுவரின் மீது ஏறி அமர்ந்துகொண்டது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் லால் கோத்தி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்திருக்கிறது.

கரு
கரு
சித்திரிப்புப் படம்

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்து, அந்தக் குழந்தைக் கருவை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அந்தக் கரு 8 மாத ஆண் குழந்தை என்பது மருத்துவ சோதனையில் தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில், இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ``இறந்த குழந்தையின் குடும்பத்தினரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மருத்துவமனை வளாகத்திலுள்ள ஆக்ஸிஜன் ஆலைக்கு அருகிலேயே இறந்த கரு கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி எந்தவொரு சிசிடிவி-களும் இல்லை. நவம்பர் 15-ம் தேதி முதல் பிறந்த குழந்தைகளைப் பற்றி பதிவுசெய்த பட்டியலை மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறோம்.

காவல்துறை
காவல்துறை

குழந்தை மருத்துவமனையில் இறந்து பிறந்திருக்கலாம். இறந்த கருவை திரும்ப எடுத்துச் செல்ல குடும்பத்தினர் தயங்கி, அருகில் எங்காவது மண்ணில் புதைத்திருக்கலாம். அதை நாய் தோண்டி எடுத்திருக்கலாம். நாய் கடித்ததில் குழந்தையின் தலையில் கடுமையான காயங்கள் காணப்படுகின்றன'' என்றார்.