Published:Updated:

புதுக்கோட்டை: `என் கணவரையும், பிள்ளைகளையும் தொந்தரவு செய்யாதீங்க!’ -திருமணம் மீறிய உறவால் விபரீதம்

தற்கொலை
தற்கொலை

``என்னால் என் குடும்பத்தினர் எந்த தொந்தரவும்படக்கூடாது என்று தான் நான் வீட்டை விட்டு வந்தேன். அப்துல் ஆசாத்தின் அப்பா அப்துல்லா, என் கணவர் மற்றும் குழந்தைகளை எந்த தொந்தரவும் கொடுக்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும்”

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை வனப்பகுதியில் ஒரு பெண் தூக்கில் தொங்கியவாறும், ஆண் ஒருவர் தரையில் விழுந்து கிடப்பதாகவும் கீரனூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கீரனூர் போலீஸார் விசாரணையைத் துவக்கினர். இறந்தவர்களின் சடலங்களுக்கு அருகே விஷபாட்டில்கள் மற்றும் ஒரு கடிதமும் கிடந்துள்ளது. அதோடு, இறந்துகிடந்த ஆணின் செல்போனைக் கைப்பற்றி விசாரித்ததில் இறந்து கிடந்தவர் புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா என்பவரது மகன் அப்துல் ஆசாத்(41) என்பது தெரியவந்தது. பெண் வடவாளம் பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரது மனைவி கண்ணம்மாள்(38) என்பதும் தெரியவந்தது.

கள்ளக்காதலனுடன் பெண் தற்கொலை
கள்ளக்காதலனுடன் பெண் தற்கொலை
342242449056101

கீழே விழுந்து கிடந்த அந்தக் கடிதத்தில் கண்ணம்மாவின் கையெழுத்து இருந்தது. அந்தக் கடிதத்தில், "எனக்கு கணவர் மற்றும் 4 குழந்தைகள் இருக்கின்றனர். எனக்கும் அப்துல் ஆசாத்துக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. எங்களுக்குள் இருக்கும் பழக்கத்தை கைவிடக்கோரி அப்துல் ஆசாத்தின் அப்பா அப்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை தகாத வார்த்தைகளில் பேசியதோடு, அடியாட்களோடு வந்து தாக்கிவிட்டுச் சென்றனர். அடுத்த முறை வீட்டிற்கு வந்து மீண்டும் அடித்ததோடு, கேவலமான வார்த்தைகளில் என்னை பேசினர். இதனால், குடும்பத்தினர், ஊர்க்காரர்கள் மத்தியில் அசிங்கமாகப் போய்விட்டது.

என்னால் என் குடும்பத்தினர் எந்த தொந்தரவும்படக்கூடாது என்று தான் நான் வீட்டை விட்டு வந்துவிட்டேன். அப்துல் ஆசாத்தின் அப்பா அப்துல்லா என் கணவர் மற்றும் குழந்தைகள் என என் குடும்பத்தினரை எந்த தொந்தரவும் கொடுக்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று எழுதியுள்ளார். கடிதத்தைக் கைப்பற்றிக் கொண்ட போலீஸார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை: `என் கணவரையும், பிள்ளைகளையும் தொந்தரவு செய்யாதீங்க!’ -திருமணம் மீறிய உறவால் விபரீதம்

இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``கண்ணம்மாள் புதுக்கோட்டையில் உள்ள பிரபல கோழிக்கடை ஒன்றில் பல வருடங்களாக வேலைபார்த்து வந்துள்ளார். அப்போது அடிக்கடி கடைக்கு வரும் அப்துல் ஆசாத்துக்கும், கண்ணம்மாளுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த இரு வீட்டினரும் மாறி, மாறி கண்டித்துள்ளனர். எனினும் அவர்கள் தொடர்பைக் கைவிடவில்லை எனக் கூறப்படுகிறது. குடும்பத்திற்கு மட்டும் தெரிந்த விவகாரம் ஒருகட்டத்தில் கிராமம் முழுவதுமே பரவி அனைவருக்கும் தெரியவந்தது. அனைவருக்கும் தெரிந்துவிட்டதால், ஊருக்குள் தலைகாட்ட முடியாது என்ற நினைத்த கண்ணம்மாள் தூக்கில் தொங்கியும், அப்துல் ஆசாத் விஷம் குடித்தும் இருவரும் ஒன்றாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

ஒரு கொலை... இரண்டு தற்கொலை... விபரீதமாகிப்போன ஃபேஸ்புக் காதல் விளையாட்டு!
அடுத்த கட்டுரைக்கு