Published:Updated:

சிவகங்கை: ராணுவ வீரர் வீட்டில் இரட்டைக் கொலை! - பணம், நகை கொள்ளை

சம்பவ இடத்தில் மோப்ப நாயுடன் விசாரணை செய்யும் போலீஸார்
சம்பவ இடத்தில் மோப்ப நாயுடன் விசாரணை செய்யும் போலீஸார்

ராணுவ வீரர் வீட்டில், இருவரைக் கொலை செய்துவிட்டு பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை: `விவசாயத்துக்காக உருவான கிராமம்’ - வேலிக்கருவையால் உருக்குலையும் அவலம்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள முக்கூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சந்தியாகு. இவரின் மனைவி ராஜகுமாரி (வயது 60). இவர்களின் மகன் ஸ்டீபன், ராணுவ எல்லைக்கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றிவருகிறார். ஸ்டீபனுக்கு சினேகா (வயது 30) என்ற மனைவி உள்ளார். ஸ்டீபன் பணியில் உள்ளதால், சந்தியாகு, ராஜகுமாரி, சினேகா மூவரும் வீட்டில் இருந்திருக்கிறார்கள்.

கொள்ளை
கொள்ளை

நேற்று இரவு சந்தியாகு தோட்டக் காவல்பணிக்குச் சென்றிருந்த நிலையில், இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் உள்ளே, சினேகா மற்றும் ராஜகுமாரி ஆகியோர் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் மற்றும் 40 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. உடனே, காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார் சந்தியாகு. அதன் அடிப்படையில் காளையார்கோவில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் (பொறுப்பு) அருண்குமார் நேரில் ஆய்வு செய்தார். கொலையாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைக்கவும் உத்தரவிட்டார். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை தேடும் பணியும் நடைபெற்றுவருகிறது.

`அரசு ஜே.சி.பி-யின் டீசல் செலவுக்காக வெட்டப்படுகின்றனவா மரங்கள்?’ - சிவகங்கை சர்ச்சை

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, `முன்விரோதத்தால் கொலை நடந்ததா அல்லது கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கொலை நடந்ததா என விசாரித்துவருகிறோம்’ என்றனர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து `வைகைப் பட்டாளம்’ என்ற பெயரில், மாவட்டம் முழுவதும் கொரோனா நிவாரண உதவிகள் செய்துவருகின்றனர். இந்தநிலையில், ராணுவ வீரரின் வீட்டில் நடந்த இரட்டைக் கொலை, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு