Published:Updated:

பிரிந்து சென்ற மனைவி; நண்பனை நிர்வாணமாக்கி வீடியோ; இரட்டைக் கொலை - நண்பர்கள் எதிரிகளானது எப்படி?

கொலைசெய்யப்பட்ட சுந்தர் அசாரூதீன்

ஆவடியில் நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறினர். அதனால் இரட்டைக் கொலை நடந்துள்ளது.

பிரிந்து சென்ற மனைவி; நண்பனை நிர்வாணமாக்கி வீடியோ; இரட்டைக் கொலை - நண்பர்கள் எதிரிகளானது எப்படி?

ஆவடியில் நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறினர். அதனால் இரட்டைக் கொலை நடந்துள்ளது.

Published:Updated:
கொலைசெய்யப்பட்ட சுந்தர் அசாரூதீன்

சென்னை ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவரின் நண்பர் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஜெகன் (30). இருவரும் ஆட்டோ டிரைவர்கள். இவர்கள்மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உளளன. சிறையிலிருந்து வெளியில் வந்த மணிகண்டனும் ஜெகனும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிகண்டன், சிறையிலிருந்தபோது அவரை ஜாமீனில் எடுக்க ஜெகன் உதவி செய்துள்ளார். அதற்காக அடிக்கடி மணிகண்டனின் வீட்டுக்குச் சென்று அவரின் மனைவி பிரிசில்லாவுடன் பேசிவந்தார். அதனால் இருவரும் நெருங்கிப் பழகிவந்தனர். இதையடுத்து பிரிசில்லா, தன்னுடைய கணவர் மணிகண்டனைப் பிரிந்து சென்றுவிட்டார். அதனால் மணிகண்டன், இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்துவந்தார்.

சுந்தர்
சுந்தர்

இந்த நிலையில் தன்னுடைய மனைவி பிரிசில்லா பிரிந்து சென்றதற்கு ஜெகன்தான் காரணம் என மணிகண்டன் கருதினார். அதனால் நண்பர்களாக இருந்த இருவரும் எதிரிகளாகினர். இந்தச் சமயத்தில் கடந்த வாரம் ஆவடிப் பகுதியில் மணிகண்டனை ஜெகன் நிர்வாணமாக வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இந்த வீடியோவை வெளியிடாமலிருக்க வேண்டுமென்றால் ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என ஜெகன், மணிகண்டனிடம் கூறியுள்ளார். இதையடுத்து ஜெகனைத் தீர்த்துக்கட்ட மணிகண்டன் முடிவுசெய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த 12-ம் தேதி இரவு தன்னுடைய நண்பர்களான அசாருதீன், சுந்தர் உட்பட சிலருடன் சேர்ந்து ஆவடி பஸ் நிலையத்தின் பின்பகுதியில் உள்ள ஓசிஎஃப் மைதானத்தில் ஜெகன் மது அருந்தினார். இந்தத் தகவல் கிடைத்ததும் மணிகண்டன், தன்னுடைய நண்பர்கள், கூலிப்படையினர் சிலரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்றார். அங்கு ஜெகனைக் கொலைசெய்ய மணிகண்டன் தலைமையிலான டீம் சுற்றிவளைத்தது. அதைப் பார்த்ததும் ஜெகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால் மணிகண்டன் டீமிடம் ஜெகனின் நண்பர்களான அசாருதீனும் சுந்தரும் சிக்கிக்கொண்டனர். அவர்கள் இருவரையும் மணிகண்டன் டீம் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. கொலை குறித்த தகவல் ஆவடி டேங்க் ஃபேக்டரி காவல் நிலையத்துக்குத் தெரியவந்தது. உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜு பிரின்ஸ் ஆரோன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அசாருதீன், சுந்தர் ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் கொலை குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கொலை
கொலை

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கொலைசெய்யப்பட்ட அசாருதீன் மீன் வியாபாரம் செய்துவந்துள்ளார். இவரின் மனைவி நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். சுந்தர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மணிகண்டனைப் பிடித்து விசாரித்தோம். அவர் அளித்த தகவலின்பேரில் கொலை வழக்கில் தொடர்புடைய எட்டுப் பேரை பிடித்துள்ளோம்.

மணிகண்டனின் மனைவி பிரிசில்லா, அவரைப் பிரிந்து சென்ற பிறகு ஜெகனுடன் நட்பாக இருந்துவந்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் மணிகண்டனுக்கு ஜெகன் அடிக்கடி தொல்லை கொடுத்துவந்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிகண்டனை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த ஜெகன், ஒரு லட்சம் ரூபாய் கேட்டிருக்கிறார். அதனால் ஜெகன்மீது மணிகண்டன் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார். இதையடுத்து ஜெகனைக் கொலைசெய்ய மணிகண்டன் கூலிப்படைக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி கடந்த 12-ம் தேதி ஜெகனுக்கு போன் செய்து பணத்தைக் கொடுப்பதாகக் கூறியுள்ளார் மணிகண்டன். அதை நம்பி வந்த ஜெகனை, மணிகண்டன் டீம் கொலை செய்ய முயன்றபோதுதான் சுந்தரும் அசாருதீனும் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜெகன், தலைமறைவாக இருக்கிறார். அவரைப் பிடித்து விசாரித்தால் முழு விவரமும் தெரியவரும். இந்த வழக்கில் மணிகண்டன் உட்பட ஒன்பது பேரைக் கைதுசெய்துள்ளோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism