Published:Updated:

``என்னை நம்பாமல் அசிங்கப்படுத்திவிட்டார்கள்!" - வீடியோ பதிவிட்டு தற்கொலைசெய்த டிரைவர்

தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

தனியார் மருத்துவமனையில் டிரைவராகப் பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

``என்னை நம்பாமல் அசிங்கப்படுத்திவிட்டார்கள்!" - வீடியோ பதிவிட்டு தற்கொலைசெய்த டிரைவர்

தனியார் மருத்துவமனையில் டிரைவராகப் பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published:Updated:
தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

சென்னை, பொழிச்சலூரைச் சேர்ந்தவர் அலாவுதீன் (38). டிரைவரான இவர், அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி சுமிதா. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 10-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அலாவுதீன், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவைப் பறிமுதல்செய்த சங்கர்நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தற்கொலை
தற்கொலை

போலீஸார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``தற்கொலை செய்துகொண்ட டிரைவர் அலாவுதீனுக்கும் சுமிதாவுக்கும் திருமணமாகி 15 ஆண்டுகளாகின்றன. அலாவுதீன், கடந்த 14 ஆண்டுகளாக பொழிச்சலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டிரைவராக வேலைப்பார்த்து வந்துள்ளார். அப்போது மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ் ஒருவருடன் அலாவுதீன் பழகியதாகத் தெரிகிறது. அது தொடர்பாக அலாவுதீனுக்கும் அவரின் மனைவி சுமிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பேசாமல் இருந்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கணவன் மனைவி பிரச்னை தொடர்பாக கடந்த 09-8-22 ம் தேதி தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் அலாவுதீன்மீதும், அந்த நர்ஸ்மீதும் சுமிதா புகாரளித்துள்ளார். அது தொடர்பாக இருவரையும் போலீஸார் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில்தான், அலாவுதீன் தற்கொலைசெய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம். இந்த வழக்கில் அலாவுதீன் மருத்துவமனை வேலையைவிட்டு சில மாதங்களாகின்றன. ஏன் இவ்வளவு தாமதமாக மருத்துவமனைமீது குற்றம்சாட்டியுள்ளார் என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

அலாவுதீன்
அலாவுதீன்

அலாவுதீன் வெளியிட்டுள்ள வீடியோவில், ``நான் எல்லா பெண்களுடன் சகஜமாக பழகுவேன். அது எல்லோருக்கும் தெரியும். ஆனால், என்னுடன் அந்தப் பெண்ணை சேர்த்து அவமானப்படுத்தி விட்டார்கள். அந்தப் பெண்ணையும், அவர் குடும்பத்தினரையும் அசிங்கப்படுத்திவிட்டார்கள். அந்தப் பெண்ணுக்கு அவமானம் ஏற்பட்டால் அவரும் விபரீத முடிவை எடுப்பார். எனக்கு ஏற்பட்ட அவமானத்தால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். என் மரணத்துக்கு காரணமானவர்கள் நான் வேலைப்பார்த்த மருத்துவமனையின் டாக்டர்கள் உட்பட சிலர் உள்ளனர். (வீடியோவில் டாக்டர், ஊழியர்களின் பெயர்களை குறிப்பிடுகிறார்) என்னுடைய சாவுக்கு அவர்கள்தான் காரணம். நானும், அந்தப் பெண்ணும் தவறு செய்யவில்லை. இந்த தவறுக்கு என் மனைவிக்கும் பங்கு உண்டு. நான் நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன். என் மரணத்துக்கு காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.