Published:Updated:

சென்னை: கொரோனாவால் வேலை இழந்த டிரைவர்! - ரூ.3 லட்சம் கடனால் தற்கொலை

 தற்கொலை
News
தற்கொலை ( Representational Image )

சென்னை திருநின்றவூரில் கொரோனாவால் வேலையை இழந்த டிரைவர், 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். அதனால் காதல் மனைவியை தவிக்கவிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை திருநின்றவூர், ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் ராமசந்திரன் (32). கார் டிரைவராக வேலை பார்த்துவந்த இவர், கடந்த 2016-ம் ஆண்டு, ஜூலை மாதம் திருநின்றவூர் சக்திவேல் நகரைச் சேர்ந்த அகினேஷியா (21) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக ராமசந்திரனுக்கு வேலை இல்லை. அதனால் வீட்டிலேயே இருந்தார். மேலும் மதுப்பழக்கத்துக்கு அடிமையான ராமசந்திரன், குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு தொல்லை செய்துவந்திருக்கிறார். வேலை இல்லாததால் பல்வேறு இடங்களில் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியிருக்கிறார்.

தற்கொலை
தற்கொலை
Representational Image

ராமசந்திரனுக்கு கடன் கொடுத்தவர்கள் அதைத் திரும்பக் கேட்டு தொல்லை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், பணத்தைக் கொடுக்க முடியாமல் ராமசந்திரன் சிரமப்பட்டிருக்கிறார். கடன் பிரச்னையால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஓம்சக்தி நகர் வீட்டிலிருந்த ராமசந்திரனும் அவரின் மனைவியும் கடந்த நவம்பர் 24-ம் தேதி திருநின்றவூர் ராகவேந்திரா நகரிலிருக்கும் ராமசந்திரனின் அப்பா வீட்டுக்கு வந்திருக்கின்றனர். அப்போது மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த ராமசந்திரன், மனைவியோடு தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதனால் மனவேதனையடைந்த அகினேஷியா, குழந்தையை ராமசந்திரனிடம் விட்டுவிட்டு தாய்வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இந்தநிலையில் திருநின்றவூர் ஓம்சக்தி நகரிலுள்ள வீட்டுக்கு ராமசந்திரன் தனியாகச் சென்று தங்கியிருக்கிறார். மறுநாள் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இது குறித்துத் தகவலறிந்த ராமசந்திரனின் தந்தை பழனி, கதவைத் தட்டியிருக்கிறார். ஆனால் உள்ளேயிருந்து ராமசந்திரன் பதிலளிக்கவில்லை. அதனால் சந்தேகமடைந்த பழனி அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது மின்விசிறியில் புடவையில் ராமசந்திரன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.

திருநின்றவூர் காவல் நிலையம்
திருநின்றவூர் காவல் நிலையம்

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள், திருநின்றவூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், ராமசந்திரனின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். ராமசந்திரனின் தற்கொலை குறித்து அவரின் மனைவி அகினேஷியா புகாரளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

கொரோனா ஊரடங்கால் வேலையை இழந்த டிரைவர், 3 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.