Published:Updated:

சென்னை: காணாமல்போன கால் டாக்ஸி டிரைவர் கொலை; செங்கல்பட்டில் சடலம் மீட்பு! - காவலர்மீது சந்தேகம்

கொலைசெய்யப்பட்ட டிரைவர் ரவி

சென்னையில் கால் டாக்ஸி டிரைவர் ரவி கொலை வழக்கில் காவலர் ஒருவர் உட்பட சிலரை போலீஸார் தேடிவருகின்றனர்.

சென்னை: காணாமல்போன கால் டாக்ஸி டிரைவர் கொலை; செங்கல்பட்டில் சடலம் மீட்பு! - காவலர்மீது சந்தேகம்

சென்னையில் கால் டாக்ஸி டிரைவர் ரவி கொலை வழக்கில் காவலர் ஒருவர் உட்பட சிலரை போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:
கொலைசெய்யப்பட்ட டிரைவர் ரவி

சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்தவர் ரவி (26). இவர் எம்.எம்.டி.ஏ பகுதியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் பணிபுரிந்தார். அதோடு கால் டாக்ஸி டிரைவராகவும் இருந்துவந்தார். இவரின் மனைவி ஐஸ்வர்யா (23). இவர், ஜூன் 4-ம் தேதி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், ``நான் சாலிகிராமத்தில் உள்ள மருத்துவமனையில் வரவேற்பாளராகப் பணியாற்றிவருகிறேன். எனது வீட்டின் அருகில் குடியிருக்கும் செம்பியம் காவல் நிலையத்தில் பணிபுரியும் செந்தில்குமாரும் என்னுடைய கணவர் ரவியும் நன்றாகப் பழகிவந்தனர். கடந்த 15.5.2022-ம் தேதி இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு சண்டை போட்டுக்கொண்டனர். அதன் பிறகு 29.5.2022-ம் தேதி செந்தில்குமார் மீண்டும் என் கணவரிடம் பிரச்னை செய்தார். அதன் பிறகு 31.5.2022-ம் தேதி முதல் என்னுடைய கணவர் ரவியைக் காணவில்லை. அவரின் செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. எனவே என்னுடைய கணவரை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் எஸ்.ஐ ராஜேந்திரன் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்.

கொலை
கொலை

காணாமல்போன ரவியின் செல்போன் சிக்னல் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவரின் செல்போன் சிக்னல், ஈக்காட்டுத்தாங்கல், ராமாபுரம் எனக் காண்பித்தது. அங்கு சென்று விசாரித்தபோது ரவியைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்தச் சூழலில் செங்கல்பட்டு அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக கே.கே.நகர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக ஐஸ்வர்யாவை போலீஸார் அழைத்துக்கொண்டு செங்கல்பட்டுக்குச் சென்றனர். ஆண் சடலத்தைப் பார்த்த ஐஸ்வர்யா கதறி அழுதார். இறந்தது தன்னுடைய கணவர் ரவிதான் என அவர் உறுதிப்படுத்தினார். இதையடுத்து ரவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ரவியின் மரணம் தொடர்பாக விசாரித்தபோது அவர் கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்டது தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரவியின் மனைவி ஐஸ்வர்யா அளித்த தகவலின்படி காவலர் செந்தில்குமார் குறித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், கடந்த 28-ம் தேதி முதல் வேலைக்கு வரவில்லை என்று தெரியவந்தது. மேலும் அவர் குடியிருந்த வீடும் பூட்டியிருந்தது. அதனால் ரவி கொலை வழக்கில் போலீஸாருக்கு காவலர் செந்தில்குமார் மீதான சந்தேகம் வலுத்தது. அது தொடர்பாக விசாரித்துவருகின்றனர். இதற்கிடையில் ஐஸ்வர்யா இன்னொரு தகவல் ஒன்றையும் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.

கொலை
கொலை

அது குறித்து போலீஸார் கூறுகையில், ``கொலைசெய்யப்பட்ட ரவியும், காவலர் செந்தில்குமாரும் ஒரே பகுதியில் குடியிருந்ததால் நண்பர்கள்போலப் பழகிவந்திருக்கின்றனர். செந்தில்குமாரின் வீட்டில் ரவியின் ஒன்றரை வயது மகள் சிறுநீர்கழித்ததில்தான் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதுதான் இந்தக் கொலைக்குக் காரணம் என ஐஸ்வர்யா கருதுகிறார். ஆனால் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக சிலரைப் பிடித்து விசாரித்துவருகிறோம். அவர்கள் வேறு காரணத்தைச் சொல்கிறார்கள். விசாரணைக்குப் பிறகுதான் ரவியின் கொலைக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சம்பவத்தன்று வீட்டிலிருந்து ரவியை கோயம்பேடு போலீஸார் எனக் கூறி சிலர் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கோயம்பேடு போலீஸார் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரவி கொலையில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism