Published:Updated:

ராதாபுரம்: கஞ்சா போதை...`ஓசி’ சிகரெட் தராததால் அரிவாள் வெட்டு! -ஆம்புலன்ஸ் டிரைவருக்கு நேர்ந்த சோகம்

மருத்துவ சிகிச்சையில் ஆம்புலன்ஸ் டிரைவர்

கஞ்சா போதை காரணமாக இளைஞர்கள் பலர் தவறான பாதைக்குச் செல்கிறார்கள். அதனால் கஞ்சா விற்பனையை முழுமையாகத் தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராதாபுரம்: கஞ்சா போதை...`ஓசி’ சிகரெட் தராததால் அரிவாள் வெட்டு! -ஆம்புலன்ஸ் டிரைவருக்கு நேர்ந்த சோகம்

கஞ்சா போதை காரணமாக இளைஞர்கள் பலர் தவறான பாதைக்குச் செல்கிறார்கள். அதனால் கஞ்சா விற்பனையை முழுமையாகத் தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Updated:
மருத்துவ சிகிச்சையில் ஆம்புலன்ஸ் டிரைவர்

நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை அதிகரித்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சுலபமாக கஞ்சா கிடைப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள்கூட கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கஞ்சா போதை காரணமாக குற்றச் செயல்கள் நடப்பதால், அதன் விற்பனையைத் தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்துவருகிறார்கள். கஞ்சாவை ஒழித்து இளைஞர்களை மீட்க வேண்டுமென்று பொதுநல மக்கள் இயக்கத்தின் சார்பாக வழக்கறிஞர் இசக்கியப்பன் ஏற்கெனவே போலீஸாருக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தநிலையில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவரை, கஞ்சா போதையில் இருந்த நபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் நடந்திருக்கிறது. ஆம்புலன்ஸ் டிரைவரான செந்தில்குமார் என்பவருக்குச் சொந்தமான மளிகைக்கடை காரியாகுளம் கிராமத்தில் இருக்கிறது.

சம்பவம் நடந்த மளிகைக்கடை
சம்பவம் நடந்த மளிகைக்கடை

ஆம்புலன்ஸ் டிரைவர் செந்தில்குமாருக்கு இன்று டூட்டி இல்லாததால், மளிகைக்கடையில் இருந்திருக்கிறார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஓசியில் சிகரெட் கேட்டிருக்கிறார். பணம் கொடுக்காமல் சிகரெட் கேட்டதால் செந்தில்குமார் கொடுக்க மறுத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கஞ்சா போதைக்கு அடிமையானதாகக் கூறப்படும் கண்ணன், தனக்கு சிகரெட் கொடுக்க மறுத்த செந்தில்குமாரை அரிவாளால் வெட்டியிருக்கிறார். தன் மீது வெட்டு விழுவதைத் தடுத்த செந்தில்குமாரின் கையில் வெட்டு விழுந்திருக்கிறது. அதில் அவரது கை விரல்கள் துண்டாகின. செந்தில்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்ததால் கண்ணன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

கஞ்சா போதை நபரால் காயமடைந்த டிரைவர்
கஞ்சா போதை நபரால் காயமடைந்த டிரைவர்

விரல்கள் துண்டான நிலையில் வலியால் துடித்த செந்தில்குமார், நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் ராதாபுரம் போலீஸார் தப்பியோடிய கண்ணனைத் தேடிவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism