Published:Updated:

மதுரை: துப்பாக்கியுடன் வலம்வந்த கடத்தல்காரர்கள்! - 190 கிலோ கஞ்சா பார்சல்களுடன் சிக்கியது எப்படி?

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

கடத்தல்காரர்களிடமிருந்து 190 கிலோ அளவுக்கு கஞ்சா பொட்டலங்களையும், தோட்டாக்களுடன் துப்பாக்கியையும் காவல்துறையினர் கைப்பற்றிய சம்பவம் மதுரையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் செயல்பாடு மதுரையில் குறையவில்லை. வாகனச் சோதனையின்போது துப்பாக்கி மற்றும் 190 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் வந்த மூவரை காவல்துறையினர் பிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா மூட்டைகள்
கஞ்சா மூட்டைகள்

ஊரடங்கில் மது விற்பனை குறைவால், கஞ்சா விற்பனை மதுரையில் அதிகமாக நடந்துவருகிறது. இதைத் தடுக்க மாநகர காவல்துறை அமைத்துள்ள தனிப்படையினர் அவனியாபுரம் பகுதியில் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

அப்போது டூ வீலரில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் காமராஜர்புரத்தைச் சேர்ந்த பூமிநாதன், சோலை என்பதும், அவர்கள் சிறையிலிருக்கும் வெள்ளைக்காளி என்பவரின் உறவினர் என்பதும் தெரிந்தது.

கைப்பற்றிய துப்பாக்கி, தோட்டாக்கள், பணம்
கைப்பற்றிய துப்பாக்கி, தோட்டாக்கள், பணம்

இதில் பூமிநாதன், முன்னாள் திமுக மண்டலத் தலைவர் வி.கே.குருசாமியின் மருமகன் பாண்டி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு அதில் தலைமறைவானவர் என்பதும் தெரியவந்தது.

அவர்களை சோதனை செய்ததில், ஒரு லட்சம் ரூபாய் பணமும், ஐது தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து அவர்களைப் பின்தொடர்ந்து வந்த ஆட்டோவை நிறுத்தியபோது, அதிலிருந்து ஒருவர் தப்பி ஓடிவிட, ஆட்டோ ஓட்டிவந்த காளிமுத்துவைப் பிடித்து விசாரித்தனர். அந்த ஆட்டோவில் 60 கிலோ கஞ்சா பார்சல்கள் கைப்பற்றப்பட்டன.

தனிப்படையினரின் தொடர் விசாரணையில் தப்பி ஓடிய அருண்குமாரின் உறவினர் வீட்டில் 130 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றினார்கள். இந்த வழக்கில் தப்பியோடிய அருண்குமார் உட்பட சிலரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

பழிக்கு ப்பழி கொலை வழக்குகளில் சிக்கி சிறையில் இருப்பவர்களை வெளியில் கொண்டு வர, அதற்கான வழக்கு செலவுக்காக இவர்கள் கஞ்சா தொழிலில் ஈடுபட்டுவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

190 கிலோ அளவுக்கு கஞ்சா பொட்டலங்களையும், தோட்டாக்களுடன் துப்பாக்கியையும் காவல்துறையினர் கைப்பற்றிய சம்பவம் மதுரையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு