Published:Updated:

ரூ.1,000 கோடி மதிப்பு... பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் போதைப்பொருள்கள் குஜராத்தில் பறிமுதல்!

போதைப்பொருள் ( ANI )

குஜராத்தில் மும்பை போலீஸார் ரூ.1,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

ரூ.1,000 கோடி மதிப்பு... பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் போதைப்பொருள்கள் குஜராத்தில் பறிமுதல்!

குஜராத்தில் மும்பை போலீஸார் ரூ.1,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

Published:Updated:
போதைப்பொருள் ( ANI )

மும்பையில் கடந்த வாரம் ரூபாய் ஆயிரம் கோடிக்கும் அதிகமான மெபெட்ரோன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கெமிக்கல் இன்ஜினீயர் ஒருவர் இதைத் தொழிற்சாலையில் தயாரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் குஜராத்திலும் இது தயாரிக்கப்படுவது தெரியவந்தது. உடனே மும்பை போலீஸார் குஜராத்துக்குச் சென்று அங்குள்ள அங்கிலேஷ்வர் என்ற இடத்திலுள்ள தொழிற்சாலையில் அதிரடி ரெய்டு நடத்தி 513 கிலோ மெபெட்ரோன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.1,026 கோடி. அதோடு போதைப்பொருள் தயாரிக்கத் தேவைப்படும் பொருள்களும் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதைப்பொருள் பெரும்பாலும் பார்ட்டிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும். இதைத் தயாரித்த பிரேம் பிரகாஷ் சிங் என்பவர் கைதுசெய்யப்பட்டார். பிரேம் பிரகாஷ் சிங் மருந்து வர்த்தகத்தில் ஈடுபடக்கூடியவர். இவரின் தொழிற்சாலையில் ஆரம்பத்தில் சமையலுக்குப் பயன்படும் மெத்தம்பேட்டமைன் என்ற ரசாயானத்தை தயாரித்துவந்தார்.

ரூ.1,000 கோடி மதிப்பு... பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும்   போதைப்பொருள்கள் குஜராத்தில் பறிமுதல்!

அதன் பிறகுதான் இதில் வேறு சில பொருள்கள் சேர்த்தால் மெபெட்ரோன் என்ற போதைப்பொருள் தயாரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டு அதைத் தயாரித்துவந்திருக்கிறார். சிங் இதற்கு முன்பு மும்பை அம்பர்நாத் பகுதியிலுள்ள தொழிற்சாலையில் சமையலுக்குப் பயன்படும் மெத்தம்பேட்டமைன் தயாரித்து மகாராஷ்டிராவுக்குள் சப்ளை செய்து வந்தாராம். அதன் பிறகு அம்பர்நாத் தொழிற்சாலையில் போதைப்பொருள் தயாரிக்க ஆரம்பித்தனர். போலீஸாரின் கெடுபிடி அதிகரித்ததால், உற்பத்தியை குஜராத்துக்கு மாற்றியிருந்தார்.

அம்பர்நாத் தொழிற்சாலையிலும் போலீஸார் ரெய்டு நடத்தினர். சிங்கிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிரிராஜ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது தெரியவந்திருக்கிறது. கிரிராஜ் கெமிக்கல் இன்ஜினீயரிங் முடித்துள்ளார். அவர் மூலம்தான் போதைப்பொருளை எப்படித் தயாரிக்க வேண்டும் என்று சிங் கற்றுக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். கிரிராஜும் கைதுசெய்யப்பட்டு மும்பைக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே குஜராத்துக்கு அடிக்கடி வெளிநாட்டிலிருந்து அதிக அளவில் போதைப்பொருள் கடத்திவரப்படுகிறது. கடலில் படகு மார்க்கமாகவும், கப்பல் மார்க்கமாகவும் குஜராத்துக்கு போதைப்பொருள் கடத்திவரப்படுவது குறிப்பிடத்தக்கது.