Published:Updated:

`தலைக்கேறிய போதை; பாறைக்குழிக்குள் இளைஞரின் சடலம்!' -கரூரை அதிரவைத்த மர்ம மரணம்

சம்பவம் நடந்த பாறைக் குழி
சம்பவம் நடந்த பாறைக் குழி ( நா.ராஜமுருகன் )

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அவரது நண்பர்கள் பாறைக்குழிக்குள் தள்ளிவிட்டு கொலை செய்தார்களா அல்லது வேலுச்சாமியே மதுபோதையில் கால் இடறி பாறைக்குழிக்குள் தவறி விழுந்து இறந்தாரா என்று வேலுச்சாமியின் நான்கு நண்பர்களிடமும் வாங்கல் காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் அருகே கல் குவாரியில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்ததால், அது கொலையா, தற்கொலையா என்று கரூர் மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுவால்தான் அந்த இளைஞர் இறந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சம்பவ இடத்தில் போலீஸார்
சம்பவ இடத்தில் போலீஸார்
நா.ராஜமுருகன்
`சொத்து தரலைன்னா இதுதான் கதி!' - இளம் தம்பதிக்கு பெண்ணால் நேர்ந்த கொடூரம்

கரூர் மாவட்டம், மண்மங்கலத்தை அடுத்த ஆத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாங்காசோளிபாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தின் அருகில் பயன்படுத்தப்படாத பாறைக் குழி உள்ளது. கல்குவாரியாக செயல்பட்டு, பின்பு பயன்பாட்டில் இல்லாத பாறைக் குழி அது. சுமார் 50 அடி ஆழம் கொண்ட அந்தப் பாறைக் குழி அருகில் பெரும்பாலும் ஆள் அரவம் இருக்காது. இந்தப் பாறைக் குழி பகுதியை மது அருந்துபவர்கள் கூடாரமாக பயன்படுத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பாறைக் குழிக்குள் உள்ள தண்ணீரில் இளைஞர் ஒருவரின் சடலம் மிதக்க, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அதுபற்றி காவல்துறைக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். விரைந்து வந்த வாங்கல் காவல் நிலைய போலீஸார், விசாரணை மேற்கொண்டனர்.

வேலுச்சாமி சடலம்
வேலுச்சாமி சடலம்
நா.ராஜமுருகன்

பாறைக் குழிக்குள் கிடந்த அந்த இளைஞரின் சடலத்தை வெளியே எடுக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், முடியவில்லை. அதனால், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. ஸ்பாட்டுக்கு வந்த அவர்கள் அந்த பாறைக்குழி தண்ணீருக்குள் இறங்கி, போராடி இளைஞரின் உடலை மீட்டு, மேலே தூக்கி வந்தனர். அதன்பிறகு, அந்த இளைஞர் ஆத்தூர் கிராமம், பெரிய வடுகப்பட்டியைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி வேலுச்சாமி (வயது 19) என்பது தெரியவந்தது.

உடலை மீட்ட வாங்கல் காவல் நிலைய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு, வாங்கல் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், வேலுச்சாமி, தனது சக நண்பர்களான ராஜேஷ், மதன்குமார் உள்ளிட்ட 4 பேருடன் பாறைக் குழிக்குள் இறங்கிச் சென்று, தண்ணீருக்கு அருகில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, நண்பர்களுக்கிடையே மது போதையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறிய வேலுச்சாமி தண்ணீருக்குள் விழுந்தாகக் கூறப்படுகிறது. வேலுச்சாமியின் நண்பர்கள் காவல் துறையிடம், `நாங்கள் மது அருந்திக்கிட்டு இருக்கும்போது, தவறி பாறைக்குழிக்குள் விழுந்துட்டார். நாங்களும் மதுபோதையில் இருந்ததால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இது விபத்துதான்' என்று சொன்னதாகத் தெரிகிறது.

சம்பவ இடத்தில் போலீஸார்
சம்பவ இடத்தில் போலீஸார்
நா.ராஜமுருகன்

இருந்தாலும், தூரத்தில் இருந்த சிலர், வேலுச்சாமிக்கும் அவரது நண்பர்களுக்கும் மதுபோதையில் தகராறு நடந்ததைப் பார்த்ததாக காவல் துறையிடம் சொல்லியிருக்கிறார்கள். இதனால், வேலுச்சாமியை மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அவரது நண்பர்கள் பாறைக்குழிக்குள் தள்ளிவிட்டு கொலை செய்தார்களா அல்லது வேலுச்சாமியே தலைக்கேறிய மதுபோதையில் கால் இடறி அந்தப் பாறைக்குழிக்குள் தவறி விழுந்து இறந்தாரா என்று வேலுச்சாமியின் நான்கு நண்பர்களிடமும் வாங்கல் காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மது அருந்தச் சென்ற இடத்தில் இளைஞர் ஒருவர் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம், அந்தப் பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு