Published:Updated:

`சாப்பாடு வேணுமான்னுதான் கேட்டார்!' - சென்னை கால்டாக்ஸி டிரைவருக்கு நேர்ந்த சோகம்

central railway station
News
central railway station

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சாப்பிட்டுக்கொண்டிருந்த கால்டாக்ஸி டிரைவர், அவ்வழியாகச் சென்றவரிடம் `சாப்பாடு வேண்டுமா' என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், டிரைவரை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

சென்னை பூவிருந்தவல்லி டிரங்க் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுஜன் (37). இவர் கால்டாக்ஸி டிரைவராகப் பணியாற்றி வருகிறார். இவர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள கடையில் நேற்று இரவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற நபர், சுஜன் சாப்பிடுவதை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். இதனால் அந்த நபர் மீது பரிதாபப்பட்ட சுஜன், 'சாப்பாடு வேண்டுமா' என அன்பாகக் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், `என்னைப் பார்த்து சாப்பாடு வேண்டுமா என்று எப்படிக் கேட்கலாம்?' என்று சுஜனிடம் தகராறு செய்துள்ளார்.

Representational image
Representational image

தகராறு செய்த நபரை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் சத்தம் போட்டுள்ளனர். இந்தச் சமயத்தில் உடைந்த பாட்டில் ஒன்றை எடுத்த அந்த நபர், சுஜனின் கழுத்தில் குத்தியுள்ளார். அதை சற்றும் எதிர்பாராத சுஜன், நிலைதடுமாறினார். அவரின் கழுத்துப் பகுதியிலிருந்து ரத்தம் கொட்டியது. அதைப் பார்த்த ஆட்டோ டிரைவர்கள், சுஜனை குத்திய நபரை மடக்கிப் பிடித்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிறகு, அந்த நபரை பெரியமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த சுஜனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த காஞ்சி (19) எனத் தெரியவந்தது.

central railway staion
central railway staion

மேலும், அவர் குடிபோதையில் இருந்துள்ளார். போதை தெளிந்தபிறகு காஞ்சியிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளளனர். சாப்பாடு வேண்டுமா என்று கேட்ட கால்டாக்ஸி டிரைவரை பாட்டிலால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.