கள்ளக்குறிச்சி பகுதி வாட்ஸ்-அப் குழுக்களில் இன்று வெளியான ஒரு வீடியோ காட்சியில் கையில் பூச்சிக்கொல்லி மருந்துடன் நிற்கும் பெண்மணி, “என் குடும்பத்தை அழிக்க நினைச்சிட்டாங்க. இதுக்குமேல இந்த இடத்துல நான் உயிரோட இருக்கப் போறதில்லை. நானும் என் பிள்ளைகளும் மருந்து குடிச்சிட்டோம். எங்களுக்கு போலீஸும் ஹெல்ப் பண்ணல. ஊர்க்காரங்களும் ஹெல்ப் பண்ணல. மன உளைச்சலால எங்க குடும்பமே மருந்து குடிச்சி சாகப் போகுது. போலீஸ் எதிராகவே வேலை பாக்கறாங்க. இதுக்கு மேல இந்த இடத்துல உயிர் வாழ எங்களால முடியல.

இதுக்கு ஒரு தீர்வை சொன்னால்தான் என் குடும்பம் நல்லாருக்கும். இல்லைன்னா இப்போவே நானும் என் பிள்ளைகளும் உங்க கண் முன்னாடியே மருந்து குடிச்சிட்டு சாகறோம்” என்று கூறிவிட்டு கையில் வைத்திருந்த மருந்தை குடிக்கிறார். அப்போது அந்தப் பெண்ணின் குழந்தை அதை தடுக்க முயல்வதுட அந்த வீடியோ காட்சி முடிகிறது. அடுத்த வீடியோவில் தன் இரண்டு குழந்தைகளைக் காட்டும் அந்தப் பெண், ``இவங்கதான் என் ரெண்டு பசங்க. பிள்ளைகளுக்கும் நான் மருந்து கொடுத்துட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஊர்க்காரங்க எல்லாம் எங்களுக்கு எதிராகவே செய்றாங்க. எங்களால இந்த இடத்துல வாழ முடியல. ஒரு பொம்பளைக்கு இவ்ளோ வேதனை கொடுக்கறாங்க. எங்களை சாகடிக்க நினைக்கறாங்க. நானும் என் பிள்ளைகளும் மருந்து குடிச்சிட்டோம். இனிமேல் நாங்க உயிர் வாழப் போறதில்ல” என்று கூறும்போது, அந்த சிறுவர்கள் அழத் தொடங்குகிறார்கள். சமூக வலைதளங்களில் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த வீடியோ காட்சிகள் குறித்த தகவல்களை சேகரித்தோம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ஈரியூர் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், அம்சா தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த காட்டுக்கொட்டாய் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டுக்கு அருகில் ஐயப்பன், மணிமேகலை ஆகிய மற்றுமொரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரின் வீடுகளுக்கு இடையிலும் ஒரு சிறிய காலி இடம் இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்த காலி இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து புகார் கொடுப்பதற்காக ரமேஷ், அம்சா தரப்பில் கீழ்குப்பம் காவல்நிலையம் சென்றிருக்கின்றனர். அப்போது இது வருவாய் துறையின் கீழ் வருவதால் அங்கு சென்று புகார் அளிக்குமாறு வலியுறுத்தியிருக்கின்றனர். அதன்படி கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்டவர்களிடம் புகாரளிக்கச் சென்றபோது, காவல்துறையிடம் புகார் அளியுங்கள் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதையடுத்துதான் அம்சா பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். அதனை தனது செல்போனிலும் வீடியோ எடுத்திருக்கிறார். குழந்தைகள் அழுகுரலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். தற்போது அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மூவரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.