Published:Updated:

அடிக்கடி மின்வெட்டு: அடிதடியில் இறங்கிய மக்கள் - சூறையாடப்பட்ட அலுவலகம்... ஊழியர் மண்டை உடைப்பு!

மின்வெட்டு - மண்டை உடைக்கப்பட்ட மின்பணியாளர்

திருவள்ளூர் மாவட்டத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் மின்வாரிய ஊழியரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி மின்வெட்டு: அடிதடியில் இறங்கிய மக்கள் - சூறையாடப்பட்ட அலுவலகம்... ஊழியர் மண்டை உடைப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் மின்வாரிய ஊழியரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
மின்வெட்டு - மண்டை உடைக்கப்பட்ட மின்பணியாளர்

திருவள்ளூரை அடுத்துள்ள மணவாள நகர்ப் பகுதியில் மின் பகிர்மான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்தசில தினங்களாக அந்தப் பகுதியில் அடிக்கடி தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, இந்த அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் சிலர், மின்வெட்டு குறித்து அங்கிருந்த பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உடைக்கப்பட்ட கணினி
உடைக்கப்பட்ட கணினி

ஒருகட்டத்தில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த அந்த கும்பல் அலுவலகத்திலிருந்த கணினி உள்ளிட்ட பொருள்களை உடைத்துச் சூறையாடியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், அந்த கும்பல் அலுவலகத்திலிருந்த கள உதவியாளர் குப்பன் என்பவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளது. இதில் அவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. காயமடைந்த குப்பன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

மண்டை உடைக்கப்பட்ட ஊழியர்
மண்டை உடைக்கப்பட்ட ஊழியர்

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சம்பவத்தில் தொடர்புடைய பாலாஜி என்பவரைக் கைது செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய மற்றவர்களையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மின்வெட்டு காரணமாக ஊழியர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism