Published:Updated:

சரண்டரான ‘டம்மி’ கொலையாளிகள்... அரியலூர் வழக்கறிஞர் கொலையில் பகீர் ட்விஸ்ட்!

வழக்கறிஞர் சாமிநாதன் கொலை
பிரீமியம் ஸ்டோரி
வழக்கறிஞர் சாமிநாதன் கொலை

‘மூணு வருஷத்துக்குள்ள பழிக்குப் பழி தீர்ப்பேன்’ என்று அவருடைய அன்ணன் இளையராஜாவும், அவருடைய சொந்தக்காரர்களும் சபதம் எடுத்திருக்கிறார்கள்.

சரண்டரான ‘டம்மி’ கொலையாளிகள்... அரியலூர் வழக்கறிஞர் கொலையில் பகீர் ட்விஸ்ட்!

‘மூணு வருஷத்துக்குள்ள பழிக்குப் பழி தீர்ப்பேன்’ என்று அவருடைய அன்ணன் இளையராஜாவும், அவருடைய சொந்தக்காரர்களும் சபதம் எடுத்திருக்கிறார்கள்.

Published:Updated:
வழக்கறிஞர் சாமிநாதன் கொலை
பிரீமியம் ஸ்டோரி
வழக்கறிஞர் சாமிநாதன் கொலை

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சாமிநாதன். இவர் கடந்த 7-9-2022 அன்று அரியலூர் மாவட்டம் அணைக்குடம் கிராமத்தில் நடைபெற்ற தன் தங்கையின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து வந்திருந்தார். மணவிழா முடிந்த சிறிது நேரத்திலேயே அருகிலுள்ள ஒரு டீக்கடையில் ஆறு பேர் கொண்ட கும்பல் சாமிநாதனை வெட்டிப் படுகொலை செய் தது. கொலை நடந்த மறுநாளே, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தாங்களே முன்வந்து காவல்துறையில் சரணடைந்தனர்.

வழக்கறிஞர் சாமிநாதன் கொலை
வழக்கறிஞர் சாமிநாதன் கொலை

தொடர்ச்சியாக போலீஸ் நடத்திய விசாரணையில், அவர்கள் ‘டம்மி’ குற்றவாளிகள் என்பதும், இதன் பின்னணியில் நடைபெற்ற தில்லு முல்லு சம்பவங்களும் வெளிவந்திருக்கின்றன. இது குறித்துப் பேசுகிற தனிப்படை போலீஸார், “கொலையான வழக்கறிஞர் சாமிநாதனின் அண்ணன் மாரியப்பனுக்கும், அதே ஊரில் கறிக்கடை நடத்திவந்த செல்வமணிக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்திருக்கிறது. இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு ‘கட்டை ராஜா’ என்ற ரெளடியின் துணையுடன் செல்வமணி யைக் கொலைசெய்தார் சாமிநாதன்.

செல்வமணியின் இறுதிச் சடங்கின்போதே, ‘மூணு வருஷத்துக்குள்ள பழிக்குப் பழி தீர்ப்பேன்’ என்று அவருடைய அன்ணன் இளையராஜாவும், அவருடைய சொந்தக்காரர்களும் சபதம் எடுத்திருக்கிறார்கள். கொலை வழக்கில் சிறைக்குச் சென்ற சாமிநாதன், ஜெயிலுக்கு போய்வந்த பிறகு, சேஃப்டியாக சென்னையிலேயே தங்கிவிட்டார். எனவே, தங்கை திருமணத் துக்கு வரும்போது சாமிநாதனை, கூலிப்படையை வைத்துத் தீர்த்துக்கட்ட இளையராஜாவும், அவரின் சொந்தங்களும் திட்டம் தீட்டியுள்ளனர். மேலும், கொலைக் குற்றத்திலிருந்து தாங்கள் தப்பித்துக்கொள்ளும் திட்டத்தையும் வழக்கறிஞர் ஒருவரது ஆலோசனையின்படி பக்காவாகச் செயல்படுத்தியுள்ளனர்.

சாமிநாதன், செல்வமணி, பெரோஸ்கான் அப்துல்லா
சாமிநாதன், செல்வமணி, பெரோஸ்கான் அப்துல்லா

அதாவது, கொலை நடந்த சமயத்தில் இளையராஜாவும், அவருடைய மனைவியும் அணைக்குடம் பஸ் ஸ்டாண்டில் இருக்கிற மாதிரியும், மற்ற சொந்தங்கள் அவரவர் ஊரில் இருக்கிற மாதிரியும் ஆங்காங்கே இருக்கிற சிசிடிவி-யில் தங்கள் முகம் தெரியும்படி நின்றிருக்கிறார்கள். அதாவது சம்பவ இடத்துக்கு இவர்கள் யாரும் வரவில்லை என்றும், கொலை தொடர்பாக போலீஸ் விசாரணைக்குத் தாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதற்காக கோர்ட்டில் சரணடைந்ததாகக் காட்டிக்கொள்ளவே இந்த நாடகம். வழக்கு விசாரணை நீதிமன்றத்துக்கு வரும்போது, அந்தக் கொலைக்கும், தங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று சிசிடிவி பதிவுகளைக் காட்டித் தப்பிப்பதே அவர்களின் திட்டம். இப்போது, கூலிப்படையைச் சேர்ந்த திருச்சி மணி கண்டனையும், மதுரை பால்பாண்டியையும் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.

இந்த வழக்கு குறித்துப் பேசிய அரியலூர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா, ‘‘கூலிப்படையை ஏவிக் கொலை செய்தது மட்டுமல்லாமல், குற்றத்திலிருந்து தப்பிக்க குற்றவாளிகள் செய்த தகிடுதத்தங்களையும் கண்டறிந்து அனைவரையும் சிறையில் தள்ளியிருக்கிறோம்” என்றார்.

கொலையாளிகளுக்கு, ‘பாபநாசம்’ கமல்ஹாசன் என்று நினைப்பு!